Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 18-09-2021

இன்றைய தியானம்(Tamil) 18-09-2021

 

அலட்டும் இருதயமே! எரிச்சலாகாதே! 

 

“ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.” – எஸ்தர் 3:5 

 

நாம் உபயோகிக்கும் கார், பைக் போன்ற வண்டிகளின் பாகங்களில் அல்லது என்ஜினில் உஷ்ணம் ஏறுவதினால் பயன் ஒன்றும் இல்லை. அது வண்டி ஓடுவதற்கு தடையாகவே இருக்கிறது. இவ்வாறு நிகழ்வதன் காரணம் என்ன? உலர்ந்த பாகங்கள் ஒன்றோடொன்று உராய்கின்றன. இப்படி உராயாமல் இருக்க எண்ணெய் போட வேண்டும். இயந்திரத்தில் அதிக உஷ்ணம் ஏற்படுவது அபாயம். அதுபோலவே நமது வாழ்விலும் “எரிச்சல்” அல்லது “மூர்க்கம்” தீமையையே விளைவிக்கிறது. 

 

வேதத்திலே, எஸ்தர் புத்தகத்திலே குறிப்பிடப்பட்டுள்ள பாபிலோன் ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை சகல பிரபுக்களுக்கும் மேலாக உயர்த்தி வைத்தார். ஆமானை, ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் வணங்கி நமஸ்கரிக்க வேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தார். ஆனால் மொர்தெகாய் தன்னை வணங்கவும் இல்லை, நமஸ்கரிக்கவும் இல்லை என்று ஆமான் கண்டபோது மூர்க்கம் நிறைந்தவனானான். மொர்தெகாயின் மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பகாரியமாய்க் கண்டது. எனவே ராஜ்யம் எங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரை எல்லாம் சங்கரிக்க வகை தேடினான். ஆனால் காரியம் மாறுதலாய் முடிந்தது. எனவே ஆமான், மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப் போட்டார்கள். ஆமானுடைய வாழ்க்கை ஏன் அப்படி முடிந்தது. ஒரு சின்ன எரிச்சலை மனதில் வைத்ததினால்! 

 

நமது வாழ்விலும் ஏதோ ஒரு ஏமாற்றமோ, பிறர் நன்றி இல்லாமலோ, அவமரியாதையாகவோ நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணமே நமக்குள் புகுந்து எரிச்சல் ஏற்படுத்தும். அது நமது வாழ்க்கை ஓட்டத்தை செளகரியமாக செல்லாதபடி தடை செய்கிறது. எரிச்சலாயிருப்பவன் என்று எண்ணப்படாதபடி கர்த்தரின் வார்த்தைகளும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும் நம்மை அமர்ந்திருக்கச் செய்யட்டும். கர்த்தர் தம் அன்பையும் உதவியையும் ஆயிரம் வழிகளில் காட்டுவார். நமது “disappointments” எல்லாம் “His appointments”. எனவே எரிச்சலை அழிக்க தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும். “நீதி கிடைக்குமென்று ஆவியைக் கொண்டு விசுவாசத்தினாலே நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்” (கலாத்தியர் 5:5). எனவே அலட்டும் இருதயமே கர்த்தரையே நம்பு! அல்லேலூயா!

- A. பியூலா 

 

ஜெபக்குறிப்பு: 

ஆந்திரா, ஒடிஸா, சட்டிஸ்கர் மாநிலங்களில் ஊழியம் செய்கிற ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)