Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 02.02.2025

இன்றைய தியானம்(Tamil) 02.02.2025

 

ஸ்தோத்திரம் சொல்லு

 

"எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது" - 1 தெசலோனிக்கேயர் 5:18

     

Hello குட்டி பிள்ளைகளே! நீங்க எல்லா நேரத்திலும் Happy யா இருந்திருக்கிறீர்களா? சில நேரம் அழுகை, கஷ்டம், வேலை, சந்தோஷம் இதெல்லாம் கலந்து வருவது தான் வாழ்க்கை. எந்த நிலையிலும் ஸ்தோத்திரம் சொல்லப் பழகிக் கொண்டால், அதுதான் ஆண்டவருக்கு பிரியம். ஸ்தோத்திரம் சொல்லி, இருக்கிற இடத்தை heaven மாதிரி மாற்றின ஒரு Story - யை தான் சொல்லப் போறேன். கேட்க ரெடி தானே! Super.

    

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் யுத்தம் நடக்கிறது போல, அடிக்கடி இரண்டு நாடுகளுக்கிடையே யுத்தம் நடக்கும். எதிரி நாட்டு மக்களை அடிமைகளாக சிறையில் அடைப்பது வழக்கம். அப்படி 17 பேரை ஒரு சின்ன அறையில் அடைத்தார்கள். அதில் அக்கா, தங்கை இரண்டு பேர் இருந்தாங்க. கொசுக்கடி, புரண்டு படுக்கக் கூட இடமில்லை, மூச்சுவிடக் கூட முடியாமல் ரொம்ப வேதனையோடு இருக்கும்போது ஒரு பாப்பா மட்டும் இயேசப்பா ஸ்தோத்திரம். உமக்கு நன்றி என்று சொன்னாள். அக்காவுக்கு கோபமா வந்தது. என்னது கொசுக்கடி தாங்கவே முடியல, தூக்கம் வரவில்லை. எப்படி ஸ்தோத்திரம் என்று சொல்லுகிறாய் என்று. என்ன செல்லங்களே! உங்களுக்கும் அப்படித்தானே தோன்றுகிறது. நீங்க fan ல, AC ல சுகமா தூங்கும்போது கூட இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் சொன்னது இல்லையல்லவா? ஓ... இனிமேல் சொல்லிடுவீங்களா? Very good . Super . எல்லா Room க்கும் முன்னாடி இரண்டு police நிப்பாங்களாம். யாராவது சண்டை, சத்தம் போட்டா தண்டனை கொடுப்பாங்க. அக்கா, தங்கை இருக்கிற அறையில் தினமும் பாடல் பாடி ஜெபிக்கிறதினால் அங்கே எந்த பிரச்சனையும் இருக்காது. மற்ற அறைகளில் சண்டை பிரச்சனை அடிக்கடி வந்து விடுமாம்.

        

இரண்டு சிறு பிள்ளைகளும் ஜெபிக்கின்றதை பார்த்த மற்றவர்களும் இயேசுவை அறிந்து கொள்ள விருப்பப்பட்டார்கள். அவர்களுக்கு பாடல் சொல்லி கொடுத்தாங்க. எல்லோரும் சேர்ந்து ஜெபிக்கவும் ஆரம்பித்தார்கள். எல்லாரும் அமைதியா எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதை பார்த்த Police அந்த அறைக்கு காவல் காக்க தேவையில்லையென்று வேறு இடத்திற்கு மாறி விட்டார்கள். கஷ்டத்திலும், நெருக்கத்திலும் ஆண்டவரை பாடித் துதித்த அந்த அறை heaven மாதிரி மாறி விட்டது. சில மாதங்களில் அவர்கள் விடுதலையாகி சொந்த இடத்திற்கு சென்று விட்டார்கள்.

         

அன்பான தம்பி தங்கச்சி! கஷ்டத்திலும் , கண்ணீரிலும், துன்பத்திலும், துக்கத்திலும் ஆண்டவரைத் துதித்து, ஸ்தோத்திரம் சொல்லிப் பாருங்களேன். நீங்க நினைத்து பார்க்க முடியாத அற்புதங்களை இயேசு கிறிஸ்து உங்களுக்குச் செய்வார். எல்லாவற்றிற்கும் ஸ்தோத்திரம் சொல்லித்தான் பாருங்களேன். விவரிக்க முடியாத இயேசப்பாவின் செயல்களைக் கண்டு சந்தோஷப்படுவீங்க. சரிதானே! 

- Sis. தெபோராள்  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)