Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 04.02.2025

இன்றைய தியானம்(Tamil) 04.02.2025

 

காடை

 

"கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்;…" - சங்கீதம் 105:40

 

காடைகளைக் குறித்து வேதாகமத்தில் யாத். 16 : 12,13, எண். 11: 31 போன்ற பல இடங்களில் வாசிக்கலாம். காடைகளை இஸ்ரவேலருக்கு ஆண்டவர் இறைச்சிகளாகக் கொடுக்கிறார். மன்னா வழங்கப்படுவதற்கு முன்னே, காடைகள் இஸ்ரவேல் மக்களுக்குக் உணவாக கொடுக்கப்பட்டது. இதை யாத். 16:12,13 -ல் பார்க்கிறோம். காடைகள் சிறிய பறவையாக இருந்தாலும் அவை முழுவதும் உண்ணக் கூடிய அளவில், புரத சத்து நிறைந்தவையாகக் காணப்படுகிறது. தன் மக்களின் உணவுத் தேவைகளைக் கர்த்தர் சரியான நேரத்தில், சரியான முறையில் சந்திக்கிறார்.

        

ஆனால் எண். 11:31-ல் நாம் பார்க்கும் போது காடைகள் பாளையத்தின் இரு பக்கங்களிலும் ஒரு நாள் பிரயாண தூரம் விழுந்து கிடந்தது. அவைகள் அந்த அளவுக்கு வழங்கப்பட்டதின் நோக்கம் அவர்கள் இச்சையே! ஜனங்கள் உணவிற்காக, இறைச்சிக்காக அழுகின்றனர். எண். 11: 4,5 ல் நமக்கு இறைச்சியை புசிக்கக் கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிகாய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம்.

         

ஆண்டவர் அவர்களுக்கு ஏற்கெனவே காடைகளைக் கொடுத்திருக்கிறார். மன்னா வழங்கப்பட்டுள்ளது. மனிதர்களின் தேவைகள் ஒவ்வொரு நாளும் மாறுகிறது. நாம் விரும்புகிறதை பெற்றுக்கொள்ள வேண்டும். அது கிடைக்காத போது அழுவதும், முறுமுறுப்பதும் இஸ்ரவேலரின் பண்பாக இருந்தது. இன்று நாமும் அதுபோலவே நாம் விரும்பியது கிடைக்காத போது முறுமுறுக்கிறோம். யாத். 16:1-13-ல் காடைகள் இறைச்சிக்காக வழங்கப்பட்டன. அப்பொழுதும் அவர்கள் முறுமுறுத்திருந்தனர். ஆனால் இங்கே எண்ணாகமம் 11-ஆம் அதிகாரத்தில் அழுகின்றனர். நாமும் பல நேரங்களில் ஆண்டவரிடம் இப்படி தான் எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பிக்கிறோம்.

          

இப்படிப்பட்ட அழுகைகள் நம்முடைய இச்சைகளை வேண்டுமானால் தீர்க்கும். ஆனால் அவை தேவ கோபத்தை அழைத்துக் கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள். அவருடைய சித்தத்தின்படி ஆண்டவருடைய திட்டத்தின்படி நம்முடைய வாழ்வில் வரக் கூடிய ஆசீர்வாதங்களே நம்மை உயர்த்தும். "கர்த்தர் தருகிற ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" என்ற வசனத்தின்படி ஆண்டவர் தாமே நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களே நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லையென்றால், காடைகளை உண்ணும் போதே, இஸ்ரவேலருக்குக் கிடைத்த தண்டனை, வேதனை நமக்கும் வர வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். இங்கே காடைகள் நமக்கு ஒரு எச்சரிப்பின் சத்தமாகவே காணப்படுகின்றன.

- D. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

ஆலயம் இல்லாத1000 கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)