இன்றைய தியானம்(Tamil) 12-09-2021 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 12-09-2021 (Kids Special)
கோபிகாவும் – கோழிகுஞ்சுகளும்
“...ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” – சங்கீதம் 91:15
அது ஒரு பசுமையான எங்கும் நீரோடை ஓடக்கூடிய அழகான குட்டி கிராமம். இந்த கிராமத்தில்தான் கோபிகா என்ற குட்டி பெண் வசித்து வந்தாள். பறவைகள் வளர்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். குட்டீஸ் உங்கள் வீட்டிலே என்னென்ன மிருகங்கள் மற்றும் பறவைகள் எல்லாம் வளர்க்கிறீங்க. பூனை, நாய், கிளி, கோழி எல்லாம் வளர்ப்பீங்கதானே! கோபிகாவும் அவளுக்கு பிடிச்ச மாதிரி 6 கலரான கோழி குஞ்சுகளையும், ஒரு தாய் கோழியையும் வாங்கி ஆசையாய் வளர்த்தாள். தினமும் காலையிலேயும், மாலையிலேயும் தவறாமல் அந்த கோழி குஞ்சுகளுக்கு இரைபோடுவது, தண்ணீர் வைப்பது, கூண்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை சுறுசுறுப்போடு செய்து வருவாள். பின்பு அந்த குஞ்சுகளோடு சேர்ந்து குட்டி குட்டி கலர் பந்துகளை வைத்து விளையாடுவாள். பின்பு கொஞ்ச நேரம் தாய் கோழியுடன் அந்த குஞ்சுகளையும்வெளியே விடுவாள். இதுபோல தினமும் செய்து வந்தாள்.
ஒருநாள் எப்பவும் போல் கோழியையும் அதன் குஞ்சுகளையும் வெளியே விட்டு விட்டு கலர் பந்துகளையும் அந்த குஞ்சுகளுக்கு விளையாட போட்டுவிட்டு அவள் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட ஓடிவிட்டாள். குஞ்சுகள் ஜாலியாக அந்த பந்துகளை வைத்து, வாயை வைத்து தள்ளிவிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. விளையாடிக் கொண்டிருந்த பந்து ஒன்று உருண்டோடி பக்கத்தில் இருந்த ஒரு புதருக்குள் விழுந்தது. உடனே அந்த ஆறு குஞ்சுகளும் ஒன்றாக அந்த பந்தை எடுக்க குடுகுடு வென்று ஓடி, அந்த புதரை சுற்றிலும் நின்று எப்படி இந்த பந்தை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தது. அதற்குள் உள்ளிருந்து உஸ்.... உஸ்... என்ற குரலில் ஒரு பெரிய பாம்பு வேகமாக படமெடுத்துக்கொண்டு இந்த குஞ்சுகளை சாப்பிடுவதற்காக நின்றது. குஞ்சுகள் பாம்பை கண்டதும் அலறியது. குஞ்சுகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட தாய்கோழி திரும்பி பார்த்தது. அங்கு பாம்பு தன் குஞ்சுகளின் உயிரை வேட்டையாட நின்று கொண்டிருந்ததை கண்டதும், அவர்களை காப்பாற்ற அங்கிருந்து வேகமாக பறந்து வந்து, படமெடுத்து நின்று கொண்டிருந்த பாம்பின் கண்ணில் நச் என்று கொத்தியது. பாம்பு பொத்தென்று கீழே விழுந்தது. அதற்குள் குஞ்சுகள் எல்லாம் வேகமாக ஓடி ஒளிந்தது. பின்பு தாய்கோழி தன் குஞ்சுகளையெல்லாம் கூட்டி தன் சிறகுகளுக்குள் அணைத்துக் கொண்டது. அம்மாவின் அரவணைப்பில் எந்த பயமுமில்லாமல் குஞ்சுகள் அமைதியாகத் தூங்கியது.
குட்டி தம்பி, தங்கச்சி, இந்த தாய் கோழியைப் போலத்தான் நம்ம இயேசப்பாவும் உனக்கு ஏதாவது ஆபத்தோ அல்லது தேவையோ இருக்கும்போது ஓடி வந்து உதவி செய்வாங்க. நீ செய்ய வேண்டியதெல்லாம் இயேசப்பாவை நோக்கி கூப்பிடணும். Ok.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250