இன்றைய தியானம்(Tamil) 10-09-2021
இன்றைய தியானம்(Tamil) 10-09-2021
மேன்மை பாராட்டல்
“அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.” - பிலிப்பியர் 3:11
சைபிரியன் ஒரு புகழ்பெற்ற சட்ட பேராசிரியர். இவர் தனது 40 வயது வரை ஆண்டவரை அறியாதவராக இருந்தார். செரிவியஸ் என்ற கிறிஸ்தவ நண்பரின் மூலம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவுடனே ஞானஸ்நானம் பெற்றார். கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தியாளராக மாறினார். தன் வீட்டை விற்று ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். தன் பகுதியில் தொற்று நோய் பரவி அநேக பெற்றோர் பிள்ளைகளை இழந்தனர், அநேக பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர். அதோடு பஞ்சம் ஏற்ப்பட்டது. சைபிரியன் அநேகருக்கு உதவி செய்தார். அநேகர் அதினால் உயிர் பெற்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். அப்போது அந்த பகுதியை ஆட்சி செய்த ரோம சக்கரவர்த்தி வலேரியன், சைபிரியனை கிறிஸ்துவை பற்றி அறிவித்ததால் கைது செய்து மரண தண்டனை விதித்தார்.
வேதத்தில் அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னை பற்றி சொல்லும் போது இஸ்ரவேல் வம்சத்தான். ஏனென்றால் நான் பென்யமீன் கோத்திரத்தை சார்ந்தவன். எபிரெயன், பரிசேயன் மேலும் பக்தி வைராக்கியத்தினிமித்தம் சபையை துன்பப்படுத்த அதிகாரம் பெற்றவன். அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றவன். இப்படி பல பெருமைகள் இருந்தாலும், கிறிஸ்துவுக்கு முன் இவையெல்லாம் ஒன்றுமல்ல. கிறிஸ்து என் வாழ்வில் ஜீவனுக்குமேல் உயர்வானவர். அதற்கு முன் எனக்கு இருக்கும் இந்த பெருமைகளெல்லாம் ஒன்றுமல்ல. எனவே அதை இலாபமாக எண்ணாமல் நஷ்டமாகவும், குப்பையாகவும் எண்ணுகிறேன். கிறிஸ்துவை அறிகிற அறிவே மேன்மையானது. அந்த அறிவே எனக்கு நித்திய ஜீவனை தரவல்லது. கிறிஸ்துவுக்கு முன் ஜீவனும் பெரிதல்ல என கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பல பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று அறிவித்து அவருக்காகவே மரித்தார்.
பிரியமானவர்களே! சைபிரியன் ஒன்றுமில்லாதவர் அல்ல, சட்ட பேராசிரியர், புகழ் பெற்றவர், ஞானம் நிறைந்தவர். அவர் கிறிஸ்துவை அறிந்ததும் தன் பதவியை விட்டு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மேன்மையாக எண்ணி தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து அவருக்காகவே மரித்தார். வேதத்தில் பவுலும் அவ்வாறே வாழ்ந்தார். தனக்குரிய எல்லாவற்றையும் குப்பையாக எண்ணுகிறேன் என்றார். நீங்கள் உங்கள் வாழ்வில் எதை மேன்மையாக கருதுகிறீர்கள்? உலக படிப்பு, செல்வம், புகழ், பதவியென எண்ணுகிறீர்களா? இதற்காக கிறிஸ்துவை விட்டு விட்டீர்களா? ஒரு நிமிடம் சிந்திப்போம். அவரோடு ஒப்புரவாகுவோம். பவுலைப் போல எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக செலவிட்டு அவருக்காக வாழ்வோம். கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் கிறிஸ்துவை இழந்து விடாதீர்கள்.
- D. ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
நமது சிறுவர் இல்லத்தில் பயிலும் 10th படிக்கும் பாண்டி மற்றும் அஜய்க்கு தேவன் விசேஷித்த ஞானம் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250