இன்றைய தியானம்(Tamil) 08-09-2021
இன்றைய தியானம்(Tamil) 08-09-2021
என்னை பெலப்படுத்துகிற வல்லமை
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” - பிலிப்பியர் 4:13
கர்த்தருடைய ஊழியத்தில் கடந்த இருபது வருடங்களாக பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். 2021 மார்ச் 9-ம் தேதி மாலை நேரம் கூடுகையில் செய்தியளிக்க எங்கள் இயக்கத்தின் முதன்மை சகோதரன் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். இது எனக்கு முன் பெரும் சவாலாகவே இருந்தது. காரணம் சரீரத்தில் பெலவீனப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்த என் மனைவி 79 நாட்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சையிலும் 12 நாட்கள் வீட்டு சிகிச்சையிலும் இருந்தார்கள். இறுதியில் அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போக கர்த்தருக்குள் மரித்து மார்ச் 8-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இதன் மத்தியில் தான் மார்ச் 9 அன்று சுமார் 500 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தில், தேவ வார்த்தையை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வல்லமையோடு பிரசங்கித்தேன். சொல்லொண்ணா துயரங்களும் அழையா விருந்தாளியைப் போன்று கண்களில் கண்ணீரும் என்னை நெருக்கிக் கொண்டிருக்க, “உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” என்று பிரசங்கித்தேன். கூட்டத்தின் முடிவில் அநேகர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் என்னிடம், “இன்றைக்கு எப்படி உங்களால் பிரசங்கிக்க முடிந்தது?” என்றார் ஆச்சரியமாக!! “எல்லாம் தேவனுடைய கிருபையும் அவருடைய வல்லமையுமே” என்றேன்.
பவுல் தன் உடன் ஊழியர் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் என்கிறார். பல கடுமையான சவால்களை சந்தித்து ஒன்றிலாகிலும் அதைரியப்பட்டு போகாமல் பவுல் தான் ஜெயித்து விட்டதாக நமக்கு அறைகூவல் விடுக்கிறார். மேலும் கொரிந்தியர் நிருபத்தில் எழுதும் போது, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று எழுதுகிறார். கிறிஸ்தவ வாழ்வில் நாம் நினைத்திராத போராட்டங்களும், சவால்களும் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஜெயம் நமக்கே. ஆகவே தேவனுடைய கிருபையை சார்ந்து கொள்ளுங்கள். சவால்களை முறித்தெறியுங்கள்.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
கிராம ஊழியம் செய்ய மெகா போன்கள் தேவையாக உள்ளது. சபையாகவோ, குடும்பமாகவோ பொறுப்பெடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250