Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 07-09-2021

இன்றைய தியானம்(Tamil) 07-09-2021

 

Restart

 

“அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து… சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்... என்று கர்த்தர் சொல்லுகிறார்.” -ஆமோஸ் 9:12

 

ஒரு பெரிய கம்பெனி தயாரித்த பொருட்களுக்கு திடீரென மக்களிடம் வரவேற்பு குறைந்தது. முதலாளி காரணத்தை ஆராய்ந்தார். இயந்திரத்தின் வேகம் குறைந்ததால் வெளிவரும் பொருட்களின் தரம் குறைந்ததுதான் காரணம் என உணர்ந்தார். ஆனால் அதனை எவ்வாறு சரிசெய்வதென்று தெரியவில்லை. அதற்குள் நஷ்டம் வந்தது. கம்பெனியை மூடிவிட வேண்டியதுதான் வேறு வழியில்லை என சோர்ந்து இருந்தார். அப்போது நீண்ட காலம் வேலை பார்த்த ஒரு தொழிலாளி அனைத்து பாகங்களையும் கழற்றி சர்வீஸ் செய்துவிட்டு restart செய்தால் நன்கு ஓடும் என்றார். உடனே முதலாளி சர்வீஸ் செய்ய ஆட்களை அழைத்தனுப்பினார். அவர்கள் வந்து அனைத்து பாகங்களையும் கழற்றி சுத்தம் செய்து, தேய்ந்த பகுதிகளை நீக்கி, புதியவற்றை மாற்றி, ஆயில், கிரீஸ் போட்டு இயந்திரத்தின் பற்களை கூர்மையாக்கி restart செய்தனர். இயந்திரம் புதிதுபோல் ஆனது, வேகமாக ஓடியது, அரைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரம் கூடியது, மீண்டும் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

 

யோபுவிற்கு இழப்புகளும், வேதனைகளும் மாறி மாறி வந்ததும் துக்கம் தாங்காமல் தன் பிறந்தநாளை சபிக்கிறார். சோர்ந்து விரக்தியில் பேசுகிறார். ஆனாலும் தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என தன் வாழ்வை கிறிஸ்துவிடம் அர்ப்பணிக்கிறார். அர்ப்பணிக்கும்போது தேவன் அவர் வாழ்வை restart செய்கிறார். அப்போது அவர் வாழ்வு முன்பைவிட அதிகமாய் ஆசீர்வாதம் பெற்றதாய் மாறுகிறது.

 

பிரியமானவர்களே! இழப்புகள், வியாதி இவற்றினால் சோர்ந்து, மனம் உடைந்து, வாழ விருப்பமில்லாமல் இருக்கிறீர்களா? கலங்காதீர்கள். இதுதான் restart செய்யும் நேரம். அவர் நம் வாழ்வின் எல்லா பகுதிகளையும் சீரமைத்து நம் வாழ்வை மீண்டும் புதுப்பொழிவுடன் மாற்றியமைப்பார் என்பதில் சந்தேகமில்லை. எப்படி இவ்வளவு ஆணித்தரமாக சொல்லுகிறேன் என்று எண்ணுகிறீர்களா? காரணம், நான் கணவரை இழக்கக்கொடுத்து எல்லாராலும்

கைவிடப்பட்ட சூழலில் மனக்கசப்பிலும் விரக்தியிலும் எல்லாம் முடிந்தது என்றிருந்தபோது, இது போன்ற தேவ வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தியது. நானும் அர்ப்பணித்தேன். அர்ப்பணித்த பின் சில மாதங்கள் கயிறு அவிழ்க்கப்பட்டு, கடுமையான சங்கிலியால் கட்டப்பட்டது போல் போராட்டம். ஆனால் அது தேவன் என்னை service செய்த காலம். பின் சில மாதங்களிலே என் வாழ்வை சீரமைத்து restart செய்தார்.

 

நீங்கள் வாழ்வை வெறுத்து அதை முடித்துக்கொள்ள நீங்களாகவே ஒரு முடிவை தேடிவிட்டீர்கள் என்றால் இவ்வளவு நாட்கள் நாம் கடந்து வந்த பாதை வீணாகிவிடுமே! நரகமல்லவா நம் பங்கு! அதற்காகவா இவ்வளவு பிரயாசப்பட்டோம். நமக்கு வாழ்வைத் தந்தவர் தேவன்! அது முடியும்வரை அவரது சித்தத்தின்படி நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போது பரலோக வாழ்வு நிச்சயம்! 

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

நமது தோழமை ஊழியர்கள் கிராமங்களில் சென்று ஊழியம் செய்ய தேவையான இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)