Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 05-09-2021 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 05-09-2021 (Kids Special)

 

மறவாதே! 

 

“...பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக் கொள்ளக்கடவர்கள்...” – 1 தீமோ. 5:4  

 

குட்டீஸ் இன்றைக்கு என்ன நாள் தெரியுமா? ஆசிரியர் தினம். ஸ்கூலுக்கு போகாததால மறந்துட்டீங்களா? மறக்கவே கூடாது. உங்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர் ரொம்ப முக்கியமானவர். அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லணும். ஓகே. 

 

ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் ஆறாம் வகுப்புக்கு புதிதாய் சென்ற மாணவர்கள் அழகாக யூனிபார்ம் போட்டு வரிசையா கமலா டீச்சருக்கு பின்னாடி மரத்தடிக்கு சென்றார்கள். வருகை பதிவேட்டிலிருந்து பெயர் வாசிக்கப்பட்டது. கண்ணன் பெயர் வாசிக்கும்போது, “அவன் வரவில்லை. ஆப்செண்ட் Miss” என்று கோரசாக மாணவர்கள் எல்லாரும் சொன்னார்கள். ரமேஷ் வேகமாக எழுந்து நின்று, “கண்ணன் Super-ரா படிப்பான். 5th Std இல் first mark வாங்குவான் miss” என்று சொன்னான். அடுத்து 3 நாள் கழித்து, தலைக்கு எண்ணெய் வைக்காமல், அழுக்கு உடையோடு school க்கு வந்தான் கண்ணன். “எப்பவுமே அழகா dress பண்ணி neat-டாக வருவானே இவனுக்கு என்ன ஆச்சு?” என்று எல்லாரும் நினைத்தார்கள். அடுத்த மாதத்தில் மாதத் தேர்வில் எல்லா பாடத்திலும் குறைவான மதிப்பெண் எடுத்தான். 

 

கமலா miss கண்ணனை அழைத்து அன்போடு அவனை விசாரித்தார்கள். சில மாதங்களுக்கு முன் கேன்சர் வியாதியினால் அம்மா இறந்து விட்டதை அழுதுகொண்டே சொன்னான். கமலா டீச்சர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, படிப்பதற்கு உற்சாகப்படுத்தினார்கள். உனது படிப்பிற்கு தேவையான எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எல்லா உதவிகளையும் கமலா டீச்சர் செய்தார்கள். அம்மா இறந்த துக்கத்தை மறந்து கண்ணன் நன்றாகப் படிக்க ஆரம்பித்தான். வருடங்கள் கடந்தது 10th, 12th இல் நல்ல மதிப்பெண் எடுத்து school first வாங்கினான். மேல்படிப்பிற்காக வெளிநாடு சென்று நன்றாக படித்து, அதிலும் அதிக மதிப்பெண் பெற்றான். மருத்துவப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணன் தனக்கு எல்லா விதத்திலும் உதவியாய் இருந்த கமலா டீச்சரை அந்த விழாவிற்கு அழைத்திருந்தான். வயதான தாயார் மேடைக்கு வருவதை எல்லாரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்ணன் வேகமாக போய் அவர்கள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வந்து, இவர்களின் ஊக்கமும், உற்சாகமும்தான் என்னை முன்னேற வைத்தது. இவர் எனக்கு ஆசிரியர் மட்டுமல்ல, எனது அம்மாவும் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும் எனது மேன்மைக்கு இவரே காரணம் என்று சொன்னதும் கரவொலி எழுப்பி அந்த அரங்கமே அதிர்ந்தது. 

 

அன்பு தம்பி, தங்கச்சி நீங்களும் நல்ல பிள்ளைகளாய், ஒழுக்கமுள்ளவர்களாய் இருக்க ஆசிரியர் முக்கிய காரணம்தானே! இந்த நாளிலும் உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை நினைத்து அவர்களுக்காக ஜெபிக்க நீங்க மறக்கவேகூடாது, செய்வீங்கதானே. Very Good.    

- Mrs. எலிசபெத் வாசு

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)