![](https://vmm.org.in/uploads/1630642841.jpg)
இன்றைய தியானம்(Tamil) 03-09-2021
இன்றைய தியானம்(Tamil) 03-09-2021
சிறந்த ஆசிரியர்
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.” – நீதி. 25:11
பென்சில்வேனியாவில் கெட்டிஸ்பர்க்கில் உள்ள படை வீரர்களுக்கான தேசிய கல்லறை தோட்ட அர்ப்பணிப்பு 1863 நவம்பர் 19 ஆம் தேதி நடந்த பொழுது இரண்டு பிரசித்தி பெற்ற பேச்சாளர்கள் சொற்பொழிவாற்றினார்கள். சிறப்புப் பேச்சாளரான எட்விட் எவரெட் முந்தைய சட்டமன்ற உறுப்பினர், ஆளுநர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆவார். அவரது காலத்தில் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட திரு. எவரெட் இரண்டு மணிநேரம் சொற்பொழிவாற்றினார். அவரைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பேசினார். அவரது பேச்சு இரண்டே நிமிடங்கள்தான் நீடித்தது.
கெட்டிஸ் பர்க்கில் லிங்கன் ஆற்றிய உரை உலகமெங்கும் அறியப்பட்டதாகவும் அநேகரால் மேற்கோள் காட்டப்படுவதாகவும் உள்ளது. ஆனால் எவரெட்டின் வார்த்தைகள் ஏறக்குறைய மறைந்தே போய்விட்டன. லிங்கனின் சுருக்கமான ஆனால் கருத்தாழமிக்க சொல்வன்மை நிறைந்த பேச்சு அதற்கு காரணம் அல்ல. அந்த சமயத்தில் உள்நாட்டுப் போரினால் உடைந்துபோய் புண்பட்ட மனநிலையிலிருந்த அந்த தேச மக்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக அவருடைய வார்த்தைகள் இருந்ததால் அவர்களை தொட்டது.
ஏசாயா 50:4ல் வாசிக்கும் பொழுது, “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்;…” என்று வாசிக்கின்றோம். பரிசுத்த வேதாகமத்தில் தேவ ஆவியானவர் நமக்கு ஒரு சிறந்த ஆசிரியராக காணப்படுகின்றார். நாம் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும், எந்தவிதமாய் ஆறுதல் சொல்ல வேண்டும், எங்ஙனம் போதிக்க வேண்டும் என சிறந்த ஒரு ஆசிரியராக நம்முடன் இருக்கின்றார். பரி. யோவான் தன்னுடைய சுவிசேஷப் புஸ்தகத்தில் குறிப்பிடும்பொழுது பரிசுத்த ஆவியானவர் நம்மை சிறப்பாக நடத்துகிறவர் என்று கூறுகிறார்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, நம் எல்லாருக்கும் தலைமை ஆசிரியராக இருக்கின்ற தேவனுடைய பாதத்தில் காத்திருந்து உபதேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவைப் பற்றி அறியாதவர்களுக்கு சத்தியத்தை போதிக்கின்ற சிறப்பான ஆசிரியர்களாக நாம் மாறவேண்டும் என்று ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கின்றார். அதற்கு ஆண்டவர் கிருபை செய்வாராக.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
200 பேர் கொண்ட சுவிசேஷ குழுவின் மூலம் புதிதாக 1000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250