இன்றைய தியானம்(Tamil) 01-09-2021
இன்றைய தியானம்(Tamil) 01-09-2021
பணம் - குறைவு மனம் – நிறைவு
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” - 1தீமோத்தேயு 6:6
பணக்குறைவும், பணப்பற்றாக்குறையும் இன்றைக்கு உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிற கவலைகளில் இது மிகப்பெரிய கவலையாகப் பார்க்கப்படுகிறது. விசேஷமாக இந்த கொரோனா நாட்களில் அநேகருக்கு சரியான வேலை இல்லை, வருமானம் இல்லை, விலைவாசி உயர்வு, தேவை அதிகரிப்பது என்று பல காரணங்களினால் சோர்வு ஏற்பட்டுள்ளது. ஏன்? அநேக நாடுகளில் நாட்டை நடத்தி வரும் அரசாங்கமே இந்த நாட்களில் பணப்பற்றாக்குறை என்ற சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.
பரிசுத்த வேதாகமத்தில் எலியா என்ற தீர்க்கதரிசியையும், அவரைச் சார்ந்த குடும்பங்களையும் தேசத்தையும் தேவன் போஷித்து வழிநடத்தின விதம் மிகவும் ஆச்சரியமானது. பஞ்சகாலத்தில் தேவன் எலியாவை கேரீத் ஆற்றண்டைக்கு போகச் சொல்கிறார். அங்கே உன்னைப் போஷிக்க ஒரு ஏழை விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். 1 ராஜா 17:16ன் படி எலியாவும், அந்த விதவையின் குடும்பத்தாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள் எனப் பார்க்கிறோம். மேலும் எலியாவின் ஜெபத்தைக் கேட்டு தேவன் தேசத்தின்மேல் மழையை வரப்பண்ணினார். ஒரு குறைவும் இல்லாமல் நேர்த்தியாக நடத்தினார். இதுபோல வேதத்தில் இன்னும் அநேக சம்பவங்களும் உண்டு.
தேவனுடைய பிள்ளைகளே! பணம் குறைவுபடலாம், மனம் குறைவுபடவே கூடாது! இந்த கொரோனா நாட்களில் தேவன் நமது VMM ஊழிய வளாகத்தில் தங்கியுள்ள ஊழியர்களைப் போஷித்து, பராமரித்து, கொள்ளை நோய்க்கு விலக்கிப் பாதுகாப்பதை இங்கே நான் எழுதியே ஆகவேண்டும். நண்பர்களே! உங்களுக்கும் பணப்பற்றாக்குறை பெரிய சவாலாக இருந்து சமாளிக்க முடியாமல் இருக்கிறீர்களா? உங்களை காட்டிலும் தரித்திரத்தில் உள்ளவர்களை நினைத்து பாருங்கள். தேவன் உங்களை இம்மட்டும் நடத்தி வந்ததற்காக மனநிறைவோடு நன்றி செலுத்துங்கள். இதன் மத்தியிலும் தரித்திரத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள். தேவன் தரும் மனநிறைவை உள்ளத்தில் உணருவீர்கள். தேவனுடைய கிருபையினாலே இந்த கொள்ளை நோயின் காலத்திலும் ஒரு மன நிறைவான, போதுமென்கிற எண்ணத்துடனான வாழ்க்கை வாழ பிரயாசப்படுவோம்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250