![](https://vmm.org.in/uploads/1630375801.jpg)
இன்றைய தியானம்(Tamil) 30-08-2021
இன்றைய தியானம்(Tamil) 30-08-2021
அர்ப்பணிப்பு
“...எங்கள் சகோதரியே (சகோதரனே), நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக;…” - ஆதி. 24:60
ஊழியர் ஒருவர் வீடு சந்திப்பிற்காக விசுவாசியின் வீட்டிற்கு சென்றார். அக்குடும்பத்தார் அவரை வரவேற்று அமரச்செய்தனர். அவ்வீட்டிலுள்ள வாலிப மகள் அவருக்காக தேநீர் தயாரித்து கொண்டு வந்தாள். தேநீரை வாங்கிக் கொண்டு ஊழியர் அம்மகளிடம் கேட்டார் “ஏனம்மா உன்னை ஊழியத்திற்கு அர்ப்பணிக்கக் கூடாது” என்று! உடனே திடுக்கிட்டு “ஐயா, நான் இப்போது வாலிபப் பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். இனி வேலை அடுத்து என் திருமணம், அதன்பின் குடும்பம் அதன்பின் எதிர்காலம்...” என அடுக்கிக் கொண்டே போனாள். “60 வயதிற்கு மேல் என்னால் முடிந்த ஊழியத்தை செய்கிறேன்” என்றாள். பாதி தேநீரை குடித்தபடியே கேட்டுக் கொண்டிருந்த ஊழியர் குடித்து கொண்டிருந்த தேநீரை அவளிடம் கொடுத்து மீதியை குடித்துக் கொள்ளம்மா என்றார் சிரித்துக்கொண்டே. அந்த வாலிப பெண்ணுக்கோ கோபம் வந்தது. அவளது குடும்பத்தார்களும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவ்வூழியர் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார், “பாதி டீ-யைக் கொடுத்த உடன் உனக்கு எப்படி கோபம் வந்தது, நீயும் பெலனுள்ள உன் வாழ்வை முழுவதும் உனக்காய் வாழ்ந்துவிட்டு, எஞ்சிய வாழ்க்கையை உன்னை படைத்த ஆண்டவருக்கு கொடுப்பேன் என்கிறாயே” என்றார். அதைக் கேட்ட வாலிபப் பெண் சிந்தித்தாள். சில நாட்களில் தன்னை ஆண்டவருக்காய் அர்ப்பணித்தாள்.
இதே போன்று வேதத்திலும் ஒரு பெண் தன்னை அர்ப்பணித்தபடியால் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டாள். பெரிய சீமானாய் இருந்த தன் எஜமான் ஆபிரகாமின் மகனுக்கு அவரது மூத்த ஊழியக்காரன் பெண் தேடி வரும்போது ஆண்டவரிடத்தில் ஒரு அடையாளமும் கேட்கிறான். அந்த அடையாளத்தின்படியே தண்ணீர் மொள்ள வந்த ரெபெக்காளிடம் சொல்கிறான். அந்தப் பெண்ணும் மறுப்பேதும் கூறாமல், அவருக்கும் அவருடைய 10 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்து வைக்கிறாள். அதோடு மட்டுமல்லாமல் அந்த ஊழியனை தன் வீட்டாருக்கு அறிமுகப்படுத்தியும், அவள் குடும்பத்தாரின் முழு சம்மதத்தோடும் இதுவரை பார்த்திராத மணமகனுக்கு தன்னை அர்ப்பணித்து, அவ்வூழியனுடன் தன் பயணத்தை தொடர்கிறாள். நிறைவான வாழ்வையும் பெற்றுக் கொண்டாள்.
இதை வாசிக்கின்ற சகோதரனே, சகோதரியே! உங்கள் வாழ்க்கையை ஆண்டவரின் சித்தத்திற்கு அர்ப்பணித்துள்ளீர்களா? அல்லது உங்கள் மனம் விரும்பியபடி வாழ்ந்துவிட்டு எஞ்சிய வாழ்க்கையை கொடுக்க போகிறீர்களா? நம்மை முழுமையாய் தேவனுக்கு அர்ப்பணித்தால் வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்படும், பிறருக்கும் பிரயோஜனமுள்ள வாழ்க்கையாய் அமையும்.
- R. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
12 மிஷனெரிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் அர்ப்பணிக்கப்பட்ட 500 மிஷனெரிகளை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250