![](https://vmm.org.in/uploads/1630204800.jpg)
இன்றைய தியானம்(Tamil) 29-08-2021 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 29-08-2021 (Kids Special)
வெள்ளி Spoon எங்கே?
“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” – சங்கீதம் 119:105
ஏழாம் வகுப்பு படிக்கும் பாரதியை Bible வாசிக்க வைப்பது, அவளது அம்மாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. தினமும் ஒரு சாக்குப்போக்கு சொல்லுவாள். வாரந்தோறும் Sunday School சென்றாலும் வேதம் வாசிக்க அவள் ஆர்வம் கொள்வதேயில்லை. பாரதியின் அம்மா அவளிடம் இரண்டு நாளாக நீ வேதத்தை வாசிக்கவே இல்லை, போ போய் வேதத்தை திறந்து வாசி என்றார்கள். பாரதியோ அம்மாவின் வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. இவளை எப்படி ஜெபித்து Bible படிக்க வைப்பது என்று அம்மாவிற்கு புரியவில்லை.
அன்றைக்கு பாரதி வீட்டிற்கு ரீனா Aunty தனது குட்டிப் பையனுடன், நிறைய திண்பண்டங்களோடு வந்தார்கள். பாரதிக்கு குட்டித் தம்பியை பார்த்ததும் பயங்கர சந்தோஷம், அவனோடு விளையாட ஆரம்பித்தாள். அவளது அம்மாவும் ரீனாAunty யும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அம்மா மிகுந்த துக்கத்தோடு பாரதியின் கீழ்ப்படியாமையை பற்றி ரீனா Aunty -யிடம் கூறினார்கள். ரீனா Aunty பாரதியை எப்படியாவது வேதத்தை திறந்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அவள் ஆசையாய் வைத்திருந்த வெள்ளி Spoon ஐ எடுத்து அந்த குட்டித் தம்பிக்கு சாப்பாடு ஊட்டினார்கள். பின்பு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு போய்விட்டார்கள். அவர்கள் போன பின்பு பாரதி அவள் அம்மாவிடம் சென்று ஏன் என்னுடைய வெள்ளி Spoon -ஐ எடுத்து கொடுத்தீர்கள். ரீனா Aunty அவர்கள் வீட்டிற்கு கொண்டு போய்விட்டார்கள் என்று அழுதாள். அந்த வாரம் Sunday Church க்கு போனதும் ரீனா Aunty யிடம் சென்று Aunty என்னுடைய வெள்ளி Spoon ஐ குட்டித் தம்பி தெரியாமல் எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்று நினைக்கிறேன். உங்கள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டாள். ரீனா Aunty யோ நான் எடுத்து வரவில்லை அங்கேயே உன் Bible க்குள் வைத்துவிட்டு வந்தேன். அப்படியென்றால் நீ ஒரு வாரமாக வேதத்தை வாசிக்கவே இல்லையா? என்றார்கள். பாரதிக்கோ வெட்கமாக போய்விட்டது. ஏனென்றால் அம்மா சொல்லியும் பாரதி வேதத்தை திறக்கவே இல்லை. ரீனா Aunty மறுபடியும் பாரதியிடம் இருட்டில் நடக்க, பார்க்க Torch எவ்வளவு தேவையோ, அதுபோலவே இருளான உன் வாழ்க்கை பிரகாசிப்பதற்கும், நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவதற்கும், வேதம் வாசிப்பதும், அதை மனப்பாடம் செய்வதும் மிக முக்கியம் என்றார்கள். பாரதி தன் தவறை உணர்ந்து சரி Aunty இனி Daily Bible வாசிப்பேன் என்றாள்.
குட்டி தம்பி, தங்கச்சி நீயும் இதுவரை வேதத்தை திறக்கவில்லையென்றால், இன்றையிலிருந்து வேதத்தை திறந்து படிக்க ஆரம்பித்துவிடு. Ok வா.
- Sis. பியூலா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250