Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 25-08-2021

இன்றைய தியானம்(Tamil) 25-08-2021

 

அவசரப்படாதே 

 

“நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்;…” – நீதிமொழிகள் 14:2 

 

லண்டனில், நேர்மையும் திறமையும் அயராத உழைப்பும் கொண்ட பிரபல தொழிலதிபர் ஒருவர் இருந்தார். ஒருமுறை முதலீட்டாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இடையே உலகளாவிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தொழிலதிபர்களால் கவரப்படும் முதலீட்டாளர்கள், தங்கள் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பும் இருந்தது. திடீரென்று அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால் என்ன செய்வதென்று அறியாமல், தனது தொழிலில் தனக்கு உறுதுணையாய் இருக்கிற தனது மகனை பிரதிநிதியாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்ப விரும்பினார். மகனுக்கு அனுபவம் ஏதும் இல்லாததால் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்க விரும்பி ஒரு சிறந்த கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்து, “மகனே இது ஒரு வித்தியாசமான கடிகாரம். உன்னிடம் ஒருவர் பேசும்போது இந்தக் கடிகாரம் ஒரு அதிர்வலையை உனக்கு கொடுத்தால் நீ அவர்களிடம் பேசுவதற்கு எச்சரிக்கையாயிரு நிதானமாய் அவர்களிடம் பேசு” என்று ஆலோசனை சொன்னார். 

 

குறிப்பிட்ட நாளில் மகன் அந்தக் கூட்டத்திற்கு சென்றான். தொழிலதிபர் ஒருவர் அவனை புகழ்ந்தார். உடனே கையிலுள்ள கடிகாரம் அதிர்வைக் கொடுத்தது. உடனே “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இன்னும் எவ்வளவோ உழைக்க வேண்டும்” என்று கூறி நகர்ந்தான். சற்று நேரத்தில் இன்னொருவர் வந்து உன் அப்பா தரம் குறைந்த பொருளை விற்பனை செய்கிறார் என்று சரமாரியாக பேசினார். கடிகாரம் அதிர்ந்தது, இவனோ “எங்களைக் குறித்து தவறான எண்ணம் உங்களிடம் இருக்கிறது” என்று கூறி நகர்ந்து சென்றான். 

 

இப்படியே ஒவ்வொருவரையும் சமாளித்து கூட்டத்தை முடித்து வீட்டுக்கு வந்தவன் அப்பாவிடம் நடந்த விஷயத்தை சொன்னான். “யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் நிதானமாய் பேசி ஞானமாய் நடந்து கொண்டால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கலாம். இனி என் உணர்ச்சிகளால் அதிர்வலையைக் கொடுக்கிற இந்த கடிகாரம் எனக்கு தேவையில்லை எப்படி நிதானமாய் நடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்” என்றான். 

 

மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாய் இருந்தான். ஆனாலும் இஸ்ரவேல் ஜனங்கள் அவரை வார்த்தையால் நெருக்கும்போது கன்மலையைப் பார்த்து பேசுவதற்கு பதிலாக நிதானம் தவறி அடித்துவிட்டதினால் தேவகோபமும் வெளிப்பட்டது. இதனால் கானான் சென்று தரிசனத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டிய அவன் ஆண்டவருடைய கோபத்தால் அதைக் கண்களால் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆண்டவரை முகமுகமாய் தரிசித்த மோசேக்கே இப்படிப்பட்ட வீழ்ச்சியென்றால் நீங்களும் நானும் அதிக கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆம், நாமும் கூட அநேக வேலைகளில் மற்றவர்களின் வார்த்தைகளினாலும் செயல்களினாலும் காயப்படுத்தப்பட்ட வேளைகளில் மனம் பதறி நிதானம் இழந்து செயல்பட்டு அநேக பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஆகவே கர்த்தருக்குப் பயந்து நிதானமாய் நடப்போம். 

- Mrs. வசந்தி ராஜமோகன் 

 

ஜெபக்குறிப்பு:

ஜெபக்கூடார பணிகளில் உள்ள தொய்வு மாறி விரைவாக கட்டி முடிக்கப்பட ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)