இன்றைய தியானம்(Tamil) 22-08-2021 (kids Special)
இன்றைய தியானம்(Tamil) 22-08-2021 (kids Special)
அன்புள்ள ஆலிஸ்
“அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” – 1 யோவான் 4:8
சிக்கு புக்கு, சிக்கு புக்கு, குக்கூ.... என கூவிக்கொண்டே Train வேகமாக புறப்பட்டது. என்ன குட்டீஸ் Train என்று சொன்னவுடன் உங்களுக்கும் Train ல ஜாலியா போக ஆசை வந்துடுச்சா! ஆமா, உங்களைப் போலத்தான் ஆலிஸ்-க்கும் பயங்கர ஆசையா இருந்தது. தனது ஆசையை அம்மாவிடம் சொன்னாள். ஒரு நாள் ஆலிஸ்-சும், அவள் அம்மாவும் தனது பாட்டி வீட்டிற்கு Train-ல் சென்றார்கள். ஆலிஸ்-க்கு பயங்கர குஷி. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றாள். அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. Train-ஐ விட்டு இறங்கி, குளிர் காலமாக இருந்ததால் ஸ்வெட்டரையும் போட்டுக்கொண்டு, அம்மாவின் கையைப் பிடித்து வெளியே செல்வதற்காக வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு வயதானவர், “பசிக்கிறது ஏதாவது தாருங்கள்” என்று இறங்கும் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டே இருந்தார். அந்த வயதானவரைப் பார்த்ததும் உள்ளம் உடைந்தது. தனது தாத்தா ஞாபகம் வந்தது. இவரும் நம் தாத்தாவைப்போல ஒருவர் தானே என்று எண்ணி தனது அம்மாவிடம் பணம் வாங்கி அந்த வயதானவரிடம் சென்று கனிவான வார்த்தையில் தாத்தா இந்தாங்க என்று சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு அவரை அன்பாய் பார்த்து சிரித்துவிட்டு வந்தாள்.
பின்பு ஆலிஸ்-சும் அம்மாவும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார்கள். பின்பு யாரோ தங்களை பின் தொடர்வதை உணர்ந்து இருவரும் திரும்பி பார்த்தால் அதே வயதானவர். உடனே அம்மா, “உனக்கு என்ன வேண்டும், ஏன் எங்களை பின் தொடர்ந்து வந்தாய்?” என்றார்கள். வயதானவர், “அம்மா இதுவரை யாருமே என்னை தாத்தா என்று சொன்னதே இல்லை. உங்கள் சின்ன மகள் என்னை தாத்தா என்று கூப்பிட்டது அன்புக்காக ஏங்கி நின்ற எனக்குள் ஒரு புது உறவு வந்ததுபோல் இருந்தது. எனவே மீண்டும் ஒருமுறை தாத்தா என்று கூப்பிட சொல்லுங்களேன்” என்று கண்ணீரோடு சொன்னார். அவரது கண்ணீரைக் கண்ட ஆலிஸ், தாத்தா....தாத்தா என்று அன்போடு கூப்பிட்டாள். பின்பு அவளது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று சாப்பாடும் கொடுத்து இயேசுவின் அன்பையும் எடுத்து சொன்னாள்.
குட்டி தம்பி, தங்கச்சி, ஆலிஸ்-ஸின் அன்பான குணத்தைப் பார்த்தாயா? ஒரு பிச்சைக்காரன்தானே என்று அற்பமாய் எண்ணாதபடி அன்போடு தாத்தா என்று பேசினாள். அவளைப்போல நீயும் பெரியவர்களை, ஏழை எளியவர்களை, கஷ்டப்பட்டவர்களை அற்பமாய் பார்க்கக்கூடாது. அவர்களை அன்போடு விசாரிக்க வேண்டும். அப்படி செய்தால், இயேசப்பா உன்னை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார். Ok.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250