Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 25.06.2024

இன்றைய தியானம்(Tamil) 25.06.2024

 

தேவனுடைய வழி ஆச்சரியமானது

 

"…தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை,…" - 1 கொரி. 2:9

 

அநேக பக்தர்கள் தங்கள் வாழ்நாளின் கடினமான நேரங்களில் கர்த்தர் கைவிட்டாரோ? என்று கதறுகிறார்கள். இயேசுவும் நம்மைப் போல் மாம்சத்தில் இருந்து பாடுபட்டு சிலுவையில் மரிக்கும் தருணத்தில் “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூறினார். பவுல் அப்போஸ்தலன், "இந்த பலவீனம் என்னை விட்டு நீங்க கூடுமானால் நீங்கட்டும்" என்றார். அதற்கு இயேசு “என் கிருபை உனக்குப் போதும்" என்றார். நாமும் கூட நம்முடைய சரீர பாடுகள் மற்றும் இழப்பின் நேரங்களில் ஏன் என்று கேட்டு விடை தெரியாமல் தவிப்பது போல் இருக்கிறோம். இதையே அநேக விசுவாச மக்களின் வாழ்க்கையிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதைகளை அமைத்துக் கொடுத்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை பலருடைய வாழ்க்கை சரித்திரத்தில் நம்மால் காண முடிகிறது. 

  

இயேசுவை ஏற்றுக்கொண்ட பிரவுன் என்ற போர் வீரன், கப்பல் சேதத்தில் அகப்பட்டு, ஒரு உடைந்த கட்டை மூலம் நீந்தி ஒரு தீவை சென்றடைந்தார். யாருமில்லாத அந்த தீவில் பழங்களையும், கிடைத்தவைகளை வேட்டையாடி உண்டு, உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார். கிடைத்த பொருட்களைக் கொண்டு குடிசை ஒன்றை அமைத்து, சாகும் வரை இதுதான் தன் வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தார். ஏனென்றால் அந்தப் பகுதியில் ஒரு படகையோ கப்பலையோ நீண்ட நாட்கள் பார்க்கவில்லை. ஒருநாள் வேட்டையாடி வருவதற்குள் தான் அமைத்த கூடாரம் தீப்பிடித்து எரிந்து கிடந்தது. மிகவும் சோர்ந்து போய் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்த போது, ஒரு கப்பல் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பல் தன்னை நோக்கி வருவதை அறிந்து மகிழ்ந்தார். அந்தக் கப்பலில் ஏறினார். இந்த மாலுமி கூறினார் புகைமூட்டத்தை பார்த்து நாங்கள் வந்தோம் என்றார். கர்த்தரே இதைச் செய்தார் என்று அறிந்த பிரவுன் (க்ஷசடிறn) தேவனுக்கு மகிமையை செலுத்தினார். 

  

இன்று விடை காணாமல் ஏன் இந்த பாதையில் செல்கிறோம் என்று போய்க்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், தேவன் ஒரு அற்புத பாதையை வடிவமைத்து வைத்திருக்கிறார். நாம் எல்லாவற்றிற்காகவும் கர்த்தரைத் துதிக்கும் போது, நிச்சயமாக நமக்கு கர்த்தர் நன்மையானதைத் தருவார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

கைப்பிரதி ஊழியங்கள் மூலம் கைப்பிரதி பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)