Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 04.09.2024

இன்றைய தியானம்(Tamil) 04.09.2024

 

அநுக்கிரக காலம் இன்றைக்கு 

 

“...இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” - 2 கொரிந்தியர் 6: 2 

 

ஒரு மனிதன் தான் செய்த கொலை குற்றத்திற்காக சிறைச்சாலை சென்றான் அவன் மீது இருந்த வழக்கு கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அவனது கொலை குற்றத்திற்காக மரண தண்டனை கொடுத்தார். இதை கேள்விப்பட்ட அவனுக்கு தெரிந்த அனைவரும் ஜனாதிபதிக்கு மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் அனைவரும் எழுதி இருந்தது என்னவென்றால் “அந்த மனிதன் நல்லவன் அவன் மரண தண்டனைக்குரியவன் அல்ல, தயவு செய்து அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று ஜனாதிபதியிடமிருந்து இரக்கம் பெறும் மனுவை கொடுத்தார்கள். ஜனாதிபதி பாதிரியார் உடையில் சிறைச்சாலைக்கு சென்று, மரண தண்டனைக்குரியவனை அழைத்து வரச் சொன்னார். அந்த மரண தண்டனைக்குரிய கைதி நான் அந்த பாதிரியாரை பார்க்க மாட்டேன், அவரைப் போய்விட சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டான். அவர் போய்விட்டார். ஒருவன் அவனிடம் ஓடிப்போய் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து விடுதலையாக்க வந்தவர் பாதிரியார் அல்ல, இந்த தேசத்தின் ஜனாதிபதி என்றார். அப்பொழுது அவன் எனக்கு இலவசமாக கிடைத்த விடுதலையை வேண்டாம் என்று மறுத்து விட்டேனே என்று கதறி கதறி அழுதான். மரண தண்டனையும் கிடைத்தது. 

 

பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6: 23) பாவம் செய்யும் ஆத்துமா ஆத்துமாவே சாகவே சாகும் (எசேக்கியேல் 18 :20). பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். இவ்வுலகின் ஒவ்வொரு மனிதரையும் விடுதலையாக்கவே விடுதலை பத்திரத்தை பிதாவாகிய தேவனிடம் வாங்கி கிறிஸ்துவாகிய இயேசு இந்த பூமிக்கு வந்தார். ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது என்று ஊழியக்காரர்கள் மூலமாக அந்த விடுதலை பத்திரத்தை கொடுக்க விரும்புகிறார். இன்றைக்கும் கொடுக்க விரும்புகிறார் ஆனால் அநேகர் ஆண்டவரும் இரட்சகரமான இயேசு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். இயேசுவை எனக்கு வேண்டும் என்று சொல்பவர்களுக்கு பாவத்தின் சம்பளம் மரணம் இல்லை 

 

பிரியமான மக்களே, இதுவரை இயேசு கொடுக்க வந்த விடுதலை (இரட்சிப்பு) பத்திரம் நீங்கள் வாங்கவில்லை என்றால் இன்றைக்கே இலவசமாய் வாங்கிக் கொள்ளுங்கள். இப்பொழுதே அநுக்கிரககாலம், இபொழுதே இரட்சணிய நாள், இன்றே ஆண்டவரை ஏற்றுக் கொள்வீர்களானால் பாவத்தின் தண்டனையாகிய மரணத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வீர்கள். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக!  

- Pr.S. L. இம்மானுவேல் 

 

ஜெபக்குறிப்பு:

25 ஆயிரம் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவையான டூ வீலர், 4 வீலர் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)