இன்றைய தியானம்(Tamil) 03.09.2024
இன்றைய தியானம்(Tamil) 03.09.2024
ஜெயம் பெறுவோம்
“...கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்…” - மத்தேயு 7: 8
மோசேயின் கை உயர்த்தப்பட ஆரோனும் ஊரும் உதவியாக இருந்தார்கள். மூன்று பேரால் யோசுவா ஜெயம் பெற முடிந்தது. ஜெபிக்க மோசேயை போன்றவர்கள் தேவை, ஆரோன், ஊர் போன்ற பொருளாலும், பணத்தாலும் தாங்குவோர் தேவை. யோசுவாவைப் போன்று யுத்தத்திற்கு செல்லும் மிஷனரிகளான வாலிபர்கள் தேவை. மோசே கோலை நீட்டினால் மாத்திரமே கர்த்தர் அற்புதம் செய்ய முடியும் என்று அல்ல; எதுவும் இல்லாமல் வனாந்தரத்தில் காடைகளை குவிக்க முடியும். வானத்திலிருந்து மன்னாவை 40 வருஷம் கொடுக்க முடியும். உலர்ந்த எலும்புகளையும் உயிரடையச் செய்ய முடியும். இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறவர். குறுகிப் போகாத கையை உடையவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.
ஆனாலும், நாம் பலனடைய வேண்டும் என்பதற்காகவே, நமது கிரியை எதிர்நோக்கி இருக்கிறார். ஜெயம் கர்த்தரால் மாத்திரம் வருகிறது என்பதை யோசுவாவிற்கு உணர்த்த மோசே, ஆரோன், ஊர் உபயோகப்படுத்தப்பட்டார்கள். ஜெபித்தால் மாத்திரமே ஜெயம் பெற முடியும் என்று உணராதவர்கள் பரிசுத்தவான்களாக இருக்க முடியாது. ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் உயர்வுக்கு இவரது ஜெபம் இருந்ததாக சரித்திரம் கூறுகிறது. இவர் அமெரிக்க ராணுவத்தின் தளபதியாக இருந்தபோது தன் கீழ் பணி புரியும் சேனை வீரர்களுக்காக ஜெபிப்பது வழக்கம். ஆகவே அவர் படையெடுக்கும் பலமுள்ள சேனையாக இருந்தது. இவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனபின் தன் கீழ் இருக்கும் ஒவ்வொரு துறையினருக்காகவும் இரவு 9 மணியிலிருந்து 1௦ மணி வரை தவறாமல் ஜெபிப்பாராம். ஜார்ஜ் வாஷிங்டன் போல் அநேக கிறிஸ்தவ தலைவர்களும் தங்கள் ஸ்தாபனத்திற்காக ஜெபிப்பதாலேயே அந்த ஸ்தாபனங்கள் சரித்திரம் படைக்கிறது. ஆரோன், ஊர் போன்றவர்கள் இல்லாவிட்டாலும் ஸ்தாபனங்கள் செயல் இழந்து விடும். யோசுவா போன்று உழைக்கிறவர்கள், பவுலை போல் எழும்பி, உலகத்தை கலக்க எழும்பா விட்டால் தேசம் சுதந்தரிக்கப்பட முடியாது.
அன்பானவர்களே, தேவன் அவரது ராஜ்யத்தின் கட்டுமான பணியிலே உங்களையும் ஒரு பெரிய பொறுப்பில் வைத்துள்ளார். நீங்கள் ஜெபிப்பவரா? உங்கள் பங்கு எதுவோ அதை முழுநிச்சயமாய் நிறைவேற்றுங்கள். நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்! ஜெயம் பெறுவோம் எடுப்போம்!
- Mr. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ்குள்ளாக 25, 000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்க தேவன் திறந்த வாசலை கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864