Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 06.09.2024

இன்றைய தியானம்(Tamil) 06.09.2024

 

அசையாத மனித பாலம்

 

"நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி" - 2 தீமோத்தேயு 2:3

 

பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் தன் படைகளுடன் ஒரு ஆற்றைக் கடக்க முயன்றான். பாலங்கள் தகர்க்கப்பட்டுக் கிடந்தன. ஆகவே தற்காலிகப் பாலம் அமைக்கத் திட்டமிட்டார்கள். சிலர் ஆற்றுக்குள் இறங்கி தூண்களைப் பிடித்துக் கொண்டு நிற்க, அதின் மேல் பலகைகள் கம்பிகளை வைத்து, தற்காலிக பாலம் அமைத்தனர். அந்த சேனைகள் ஆற்றைக் கடந்தன. நெப்போலியன் தூண்களைப் பிடித்துக் கொண்டு ஆற்றில் நின்றவர்களை மேலே வர கட்டளையிட்டான். ஒருவரும் மேலே வரவில்லை காரணம் குளிரில் விரைத்து பனிக்கட்டியாகி மரித்து விட்டார்கள். நெப்போலியனும் கண்ணீர் விட்டார். அழிந்து போகிற அரசாங்கத்தின் ராஜாவிற்காக அவருடைய போர்வீரர்கள் தங்கள் உயிரையே கொடுத்தனர்.  

 

நாம் யார்? ராஜாதி ராஜாவும், தேவாதி தேவனும், கர்த்தாதிகர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் போர்வீரர்கள். இயேசு கிறிஸ்து நமக்காக பாவ நிவாரண பலியாகி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து 40 நாட்கள் தம்முடைய சீடர்களுக்கு தரிசனமாகி, விண்ணுக்கு ஏறிய போது கொடுத்த கட்டளை, " நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் " என்றார். ஆம், நாம் அவர் நமக்கு கட்டளையிட்டவைகளை நிறைவேற்ற எவ்வளவாய் பாடுபட நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அவரது பணிக்காக தீங்கனுபவிக்கவும் தயாராக இருக்க வேண்டுமல்லவா?

 

பிரியமானவர்களே, ராஜாதி ராஜாவின் இந்த கட்டளைக்கு எந்த அளவிற்கு கீழ்ப்படிகிறோம்? தேவ ராஜ்ஜியம் பரவ உழைக்கிறோமா? சாத்தான் விரிக்கிற வலையில் விழுந்து மடிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த கரிசனை நமக்கு உண்டா? பாவத்தின் பாதையில் பயணம் செய்யும் வாலிபர்களை பரமனுக்கு நேராக வழிநடத்தவும், "பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் " என்ற திருமறை கூறுகிறபடி தேவனுக்கு பயந்து வாழ்கிறவர்களை இன்னும் ஆழமாய் கர்த்தருக்குள் வாழவும் ஊக்குவிக்கிறோமா? ஒரு நல்ல போர்ச் சேவகனாய் இயேசு கிறிஸ்துவுக்காக தீங்கனுபவிக்க நம்மை ஒப்புக்கொடுக்கிறோமா? அல்லது சுகபோக வாழ்வையே விரும்புகிறோமா? சிந்தித்துப் பாருங்கள்! 

     ஜெபிப்போம்! கொடுப்போம்! உழைப்போம்!

 

- Mrs. வனஜா பால்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நம் டியூசன் மிஷனெரிகளின் ஞானம், சுகம், பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)