Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 20.06.2024

இன்றைய தியானம்(Tamil) 20.06.2024

 

கர்த்தருடைய கிருபை

 

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" - புலம்பல் 3:22

 

நாம் அனுதினமும் கர்த்தரின் கிருபையை ருசித்து வருகிறோம். அவர் கரமே நம்மைப் பாதுகாக்கிறது, மூடுகிறது. அவரது செட்டைகளே நமக்கு அடைக்கலம். "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா." (சங்கீதம் 127:1) என்ற வார்த்தை எத்தனை உண்மையானது!

 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெருவெள்ளம் வந்து அநேக பாதிப்பை ஏற்படுத்தியது. எங்கள் ஊரான திருநெல்வேலியும் மிக அதிக அழிவைக் கண்டது. அநேகர் தங்கள் உடைமைகளை இழந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டதில் என் மகள் குடும்பமும் ஒன்று. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை முடித்துவிட்டு மகளுடைய வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் சென்றேன். மழை விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. அவள் வீடு இருந்த பகுதி தாழ்வாக இருந்தபடியினால் மழைநீர் வெகுவாக சேர்ந்து பெருகி ஆறு போல் ஓடியது. மளமளவென வீட்டிற்குள் வெள்ளம் வர, அவள் நடத்திக் கொண்டிருந்த ஹாஸ்டல் பிள்ளைகளும், சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என 25 பேர் மாடிக்கு சென்றோம். இடுப்பளவு இருந்த தண்ணீர் கழுத்தளவாக உயர்ந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் ஒத்தாசையுடன் அங்கிருந்து வெளியேறி மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பின் என்னுடைய வீட்டிற்கு பத்திரமாய் வந்து சேர்ந்தோம். உடுத்திய உடையுடன் வந்தவர்களுக்கு ஒரு மருத்துவ நண்பர் மூலமாய் உணவு, உடை கொடுத்து ஆதரிக்கப்பட்டோம்.

 

"வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே".... என்ற பாடலின் வரிகளை போன்று இக்கட்டு நேரத்தில் இயேசுவே அடைக்கலமாய் துருகமாய் அனுகூலமான துணையுமானார். தண்ணீரை கடக்கும் போது நான் உன்னோடிருப்பேன் என்றவர் இப்போதும் நம்மோடு இருக்கிறார்.

 

எனக்கு பிரியமானவர்களே! யோபு பக்தனின் இழப்புகளை வேதத்தில் பார்க்கும் போது, நம்முடைய இழப்புகள் குறைவு தான் என்று எண்ணி எங்கள் ஜீவனை மீட்ட இயேசுவுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை ஏறெடுக்கிறோம். ஆம், நாம் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடைய கிருபையே" அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை. எங்களது ஆபத்துக் காலத்தில் அவரை நோக்கிக் கூப்பிட்டு, அவரால் விடுவிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது போல நீங்களும் ஆபத்துக் காலத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டால் விடுவிக்கப்படுவீர்கள். தேவனை அடைக்கலமாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்! ஆமென்!

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

வட மாநிலங்களில் ஆலயமில்லாத இடங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)