Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 15.06.2024

இன்றைய தியானம்(Tamil) 15.06.2024

 

PRAISE பண்ணுங்க

 

"இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்" - ஏசாயா 43:21

 

ஐம்பது ஆண்டுகளாய் படுக்கையிலே வேதனையை அனுபவித்த ஹென்னா கிக்கின்ஸ் ஒரு வினோதமான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவள் தேவனுக்கு எப்பொழுதும் துதி செலுத்துபவளாக தனது படுக்கையை, "நன்றி செலுத்தும் மூலை" என்று அழைத்தாள். 200க்கும் மேற்பட்ட நபரின் பெயர்களோடு ஜெபக்குறிப்புகளை வைத்து ஜெபிக்கின்றவளாக இருந்தாள். கிறிஸ்துவில் ஆழமாக எப்பொழுதும் தேவனை துதிக்கின்றவளாகவே வாழ்ந்தார். தனது 77 வது வயதில் மேகமும் சூரிய பிரகாசமும் என்ற நூலை எழுதினார். நாம் கர்த்தரை துதிக்கும் போது நம்முடைய பலவீன மாத்திரமல்ல, நம்முடைய சூழ்நிலையும் மாறக்கூடியது. 

 

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலை நாம் அறிவோம். சுவிசேஷம் அறிவித்ததின் விளைவாக பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலையில் வைத்து அவர்களை பத்திரமாய் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்கு கட்டளையிடப்பட்டது. அவன் பவுலையும் சீலாவையும் உட்காவலறையில் அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டி வைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். சடுதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது. எல்லாருடைய கட்டுக்களும் கழன்று போயிற்று. அன்றே அவர்களை காவல்காத்த சிறைச்சாலைக்காரனும் இரட்சிக்கப்பட்டான்.

  

பிரியமானவர்களே! பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் துதித்து, தேவ வல்லமையை அனுபவித்தார்கள். பரலோகத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு. அது தேவனைத் துதிப்பதாகும். ஆதலால் இந்த உலகத்தில் நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வல்லமையான, அதிசயமான நாமங்களை சொல்லி துதிக்க வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாமும் பல நேரங்களில் தேவனை துதிக்க மறந்து விடுகிறோம். காரணம் நமக்குள் இருக்கிற பிரச்சனைகளும், போராட்டங்களும் தேவனைத் துதிக்க விடுகிறதில்லை. பிரச்சனை, போராட்டங்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தேவனை துதிக்க கற்றுக் கொள்வோம். இதுவரை தேவன் செய்த எல்லாவற்றிற்காகவும், இனிமேல் நம் வாழ்வில் செய்யப்போகும் ஒவ்வொன்றிற்காகவும் தேவனைத் துதிப்போம். நம் வாழ்வில் இந்த நிமிடம் வரை நம்மை உயிரோடு வைத்திருக்கிற மகா தயவை எண்ணி அவரை Praise பண்ணுவோம்! இதற்காகவே நாம், அவரால் படைக்கப்பட்டு இருக்கிறோம்.

- Mrs. ரூபி அருண்

 

ஜெபக்குறிப்பு:

313 தாலுக்காக்களிலும் சிறுவர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)