Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 23.07.2024

இன்றைய தியானம்(Tamil) 23.07.2024

 

வாழ்வுக்குப் பின்

 

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;…" - மாற்கு 14:8

 

ஸ்காட்லாந்து நாடு அனேக மிஷனெரிகளை இவ்வுலகத்திற்கு வழங்கியுள்ளது. அவர்களில் ஒருவர்தான் ராபர்ட் சிங்களேயர். இவரது தந்தை ஒரு கல்தச்சர். இவர் இளைஞனாக இருக்கும்போதே14 முதல் 17 வயது வரை கொல்லர் பணி செய்து தனது குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பான பணிக்கு தள்ளப்பட்டார். பணி செய்யும்போதே ஆலய காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஊழிய அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வந்தார். நாகர்கோவில் பகுதியில் ஊழியத்தை ஆரம்பித்தார். அப்பகுதியில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவர் ஒரு சிறந்த சிற்பி. கலையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவரால் கட்டப்பட்ட எழில் நிறைந்த மார்த்தாண்டம் ஆலயமே இதற்கு சான்றாகும். மக்களின் நண்பராகவும் அவர்களின் ஆவிக்குரிய தகப்பனாகவும் விளங்கிய சிங்களேயர் தேவன் தனக்குகொடுத்த திட்டத்தை சீருடனும் சிறப்புடனும் செய்து முடித்தார். இவர் இன்று உயிரோடு இல்லை. ஆனால் இவருடைய வாழ்வுக்குப் பின்னால் இவர் செய்த காரியங்கள், செயல்கள் மூலமாக இன்றும் ஜனங்கள் இரட்சிப்பை பெற்றிட ஏதுவாக இருக்கிறது.

 

ஆண்டவராகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே போஜன பந்தி இருக்கையில் ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலம் உள்ள வெள்ளைக்கல் பரணியை கொண்டு வந்து அதை உடைத்து அந்த தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் அதை கண்டு முறுமுறுத்தனர். இந்த தைலத்தை 300 பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே என்று சொல்லி முறுமுறுத்தார்கள். அப்பொழுது ஆண்டவர் அவளைக் குறித்து சொன்ன காரியம், "என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள்" என்று.

 

இதை வாசிக்கிற அன்பரே! தைலத்தை உடைத்து ஊற்றின ஸ்திரீயின் வாழ்வுக்குப் பின் இன்று வரை நடக்கும் காரியம் என்ன? இந்த ஸ்திரீயைப்பற்றி எங்கே எல்லாம் பிரசங்கிக்கப்படுமோ அங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று ஆண்டவரால் உரைக்கப்பட்டுள்ளது. நமக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டது ஒரு வாழ்வு. அதை வாழ்ந்து முடிப்பதற்குள் தேவநாமம் மகிமைப்படும்படியான காரியங்களை செய்து நம்முடைய ஓட்டத்தை முடித்து விட வேண்டும். ஆண்டவரே! உலகப்பற்றை உதறிவிட்டு உமக்குள் செயல்பட எனக்கு உதவி செய்யும் என்று கேட்கும்போது நிச்சயம் நமக்கு அவர் உதவி செய்வார். அன்பரே! உங்கள் வாழ்வுக்குப் பின்னும் பேசும்படியான செயல்களை செய்கிறீர்களா?

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

எல்லா தாலுகாக்களிலும் சிறுவர் முகாம் நடத்தப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)