Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 21.07.2024

இன்றைய தியானம்(Tamil) 21.07.2024

 

ராஜா யார்?

 

“கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்” - நீதி 15:18

 

ஒரு அழகான காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவைகள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டேயிருந்தன. ஒரு நாள் முயல், மான்,கரடி மூன்றும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. காட்டுக்கு ராஜா இல்லாததால் ஆளாளுக்கு நாட்டாமை பண்றீங்க என்றது கரடி. ஆமா நமக்கு ஒரு அரசன் இருந்தா பிரச்சனையை அவரிடம் சொல்லலாம். . . . . உடனே மான் சொன்னது ஆமா... ஆமா. . அப்போதான் நம்ம சண்டை முடிவுக்கு வரும். ஆனா யார்தான் காட்டுக்கு ராஜா ஆவது என்றது யானை தன் கணீர் குரலில்! இதை வைத்தே ஒரு ரகளை ஆரம்பமானது. முயல் நான் தான் காட்டுக்கு ராஜா என்றது. உன்னை ஒரே மிதியால் மிதிப்பேன் நான்தான் ராஜா என்றது கரடி.

 

என்ன செல்லங்களே, நீங்களும் வீட்டில் இப்படி அடி, மிதின்னு உங்க Sister, Brotherட்ட சண்டை போடுறீங்களா? சண்டையை மூட்டி விடுவது பிசாசின் வேலை. முடிந்தவரை சண்டை போடாமல் இருக்கணும் சரியா. அடுத்து என்ன நடந்தது என்று கேட்போமா?

 

மாறி, மாறி நான்தான் .. நான்தான் என்று கத்தினதில் சத்தம் கேட்டு விழித்தது ஒரு வயதான சிங்கம். அது பக்கத்து காட்டிலிருந்து வந்து இரண்டு நாள்தான் ஆனது. என்ன சத்தம் இங்கே என்று கேட்ட சிங்கத்தை பார்த்து எல்லா விலங்குகளும் அமைதியானது. யானை என்ன சொன்னது தெரியுமா? இந்த சிங்கமே நமக்கு ராஜாவாக இருந்தால் என்ன? சரியா சொன்னீங்க என்றது கரடி. அதை தொடந்து மான், முயல் எல்லாம் Ok..Ok..என்றது. சரி அரசனாகுவது எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. உங்களுக்குள் நடக்கும் சண்டை அளவுக்கு மிஞ்சி போனால் நான் மரண தண்டனை தான் கொடுப்பேன் என்ற சிங்க ராஜாவிடம், அப்படியே ஆகட்டும் என்றது மொத்தக் கூட்டமும். வழக்கம் போல அடுத்த நாளே முயலும், கௌதாரியும் ஒரே பொந்திற்காக சண்டை போட்டது. இது என்னோட வீடு என்றது முயல். இல்ல நான்தான் முதலில் வந்தேன். இது என்னுடையது என்றது கௌதாரி. பிறகு என்ன சிங்க ராஜாவிடம் சென்று நியாயம் கேட்டது. மாறி, மாறி சண்டையிட்டு கொண்டதால் லபெக்கென்று தனக்கு இரையாக்கி கொண்டது. இதனை கண்ட மற்ற விலங்குகள் ச்சே நமக்குள் ஒற்றுமை இல்லாததால் நம் நண்பர்களை இழந்து விட்டோமே என வருந்தி, இனிமேல் யாரோடும் சண்டை போடாமல் இருப்போம் என உறுதி எடுத்தனர்.

 

என்ன செல்லங்களே! எதற்கெடுத்தாலும் சண்டை போடாமல், விட்டு கொடுத்து வாழ்வது தான் நல்லது. கோபங்கொண்டு சண்டையிடுகின்ற (குணத்தை) பிசாசை இயேசப்பாவின் நாமத்தில் துரத்த வேண்டும் Ok தானே குட்டீஸ்.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)