Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 20.07.2024

இன்றைய தியானம்(Tamil) 20.07.2024

 

தப்புவிக்கிற தேவன்

 

“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல், வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை… சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” - 1 கொரி. 10:13

 

கர்த்தராகிய தேவன் நம்முடன் இருப்பதுடன், நம்மில் வாசமும் செய்கிறவர், வழி நடத்துகிறவரும் அவரே. ஒரு நொடிக்கூட நம்மைவிட்டு விலகாதவராக நம்முடனே இருக்கிறவர். ஆனாலும் தேவப்பிள்ளையாகிய நம் வாழ்விலே திடீரென சில சோதனைகள், விபத்துக்கள், வியாதிகள் அவ்வபோது ஏற்படத்தான் செய்கிறது. மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு (கூசயைட & கூநளவ) “பரீட்சை, தேர்வு” வைத்து அனுப்புவது போல பரலோக வாசிகளான நம் வாழ்விலும் சில சோதனைகளும், தேர்வுகளும்(சிட்சைகள்) அவ்வப்போது நிகழ்கின்றன. அதன் மூலம் தேவன் விரும்பும் ஆவிக்குரியத் தகுதியைப் பெறுகிறோம்.

 

கடந்த மே 29ம்தேதி என் கணவர் காலை 8மணி அளவில் கிராமங்களுக்கு ஊழியத்திற்கு சென்றிருந்தார். வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது மதியம் கடும்வெயிலில் Dehydration, Low Sugar, Low Pressureஎன எல்லாம் சேர்ந்து தன் சுயநினைவை இழந்து விட்டார். இருசக்கரவாகனத்தில் சென்ற அவர் எங்கள் வீட்டிற்கு வரத்தெரியாமல், நினைவிழந்த நிலையிலேயே வேறு வழியாய் எங்கெங்கோ சென்று ஒரு பள்ளத்தில் வண்டியுடன் விழுந்து விட்டார்கள். சத்தம்கேட்டு வந்தவர்கள் தேவ தூதர்களைப் போல உதவிசெய்ய தேவன் கிருபை செய்தார். ஒரு அருமையான தம்பி என்னை விபத்து நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆட்டோக்கார அன்பு சகோதரர் மூலம் மருத்துவமனை செல்ல தேவன் கிருபை செய்தார். தேவனின் பெரிதான கிருபையால், பெரிய அடியோ, எலும்பு முறிவோ இல்லாமல் சில காயங்களுடன் தேவன் தப்புவித்தார்.  

 

ஆம், நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம்பல் 3:22) உண்மையுள்ள தேவன் நமது திராணிக்கு மேலாக சோதிக்க இடங்கொடாமல் சோதனையில் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்பதை அனுபவிக்க தேவன் கிருபை செய்தார். ரோமர் 5:3ன்படி, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குமென்று பவுலின் வார்த்தைகளை உண்மையாக்கி அநேக பாடங்களை கற்றுத்தந்தார்.

 

எனக்கன்பானவர்களே! எல்லா சூழ்நிலையிலும் தப்புவிக்க வல்லவரான இயேசுகிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் குறிப்பாக ஊழியர்கள் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்துவாராக! ஆமென்.

- Mrs. சரோஜா மோகன்தாஸ்

 

ஜெபக்குறிப்பு: 

நம் பத்திரிக்கைகளுக்கு எழுதித் தருகிறவர்கள் தேவ ஆவியினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)