Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 19.07.2024

இன்றைய தியானம்(Tamil) 19.07.2024

 

உனக்காக

 

“என் குமாரனாகிய இவன்... காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான்…" - லூக்கா 15:24

 

அழகான பாதையில் ஒரு வாலிபனும், இயேசுவும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். ஆண்டவரோடு பேசின வார்த்தைகள் வாலிபனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனால் சற்று தொலைவிலேயே ஒரு பாதையில் கலர் கலரான விளக்குகளும், வண்ணமயமான மனதைக் கவரக்கூடிய காரியங்களைக் கண்டான். உடனே அவன் இயேசுவை திரும்பிப் பார்த்து, "Jesus இதோ ஒரு பாதை தெரியுது. வாருங்கள் நாம் செல்லலாம்" என்றான். இயேசு, "அங்கே செல்லக்கூடாது. அது உன்னை நித்தியத்திற்கு நேராக நடத்தாது" என்றார். வாலிபனுக்கு கோபம் வந்தது. "நீங்கள் வேண்டுமானால் வரவேண்டாம், ஆனால் நான் செல்கிறேன்" என்று இயேசுவின் கைகளை விட்டு விட்டு அந்த பாதையில் தனியே சென்றான். சில நாட்கள் ஜாலியாக சுற்றித் திரிந்தான். பின் அவனது உள்ளத்தில் வெறுமை குடிகொண்டது. யோசித்துப் பார்த்தான். அழுதான். செய்வதறியாது வந்த வழியே நடந்தான். இயேசுவோடு நடந்த நாட்கள் நினைவுக்கு வர, ஐயோ அவரை விட்டுவிட்டேனே என கண்ணீர் மல்க நடந்து வந்தான். என்ன ஆச்சரியம்! எந்த இடத்தில் இயேசுவை விட்டு சென்றானோ அதே இடத்தில் இயேசு அவனுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஓடோடி வந்து இயேசுவை கட்டிப்பிடித்து அழுதான். என்ன ஒரு அன்பு! இயேசுவின் அன்பு!  

 

இதுபோன்றுதான் வேதத்திலும் லூக்கா 15ம் அதிகாரத்தில் இளையகுமாரன் தனக்கு வரவேண்டிய சொத்துக்களை வாங்கிக் கொண்டு சென்று அனுபவித்து எல்லாம் அவனை விட்டு சென்ற பிறகு புத்தி தெளிந்தான். அழுதான், திரும்ப தன் தகப்பன் வீட்டிற்கு வந்தான். அவன் தகப்பனோ தன் மகன் தூரம் வருகிறதை கண்டு ஓடோடி வந்து கட்டி அணைத்து முத்தம் செய்தார். சந்தோஷமாக இருந்தார்கள்.

 

இதை வாசிக்கிற அன்பான சகோதர சகோதரி, ஒருநாள் இயேசுவோடு நடந்தாய். சந்தோஷமாக இருந்தாய். ஆனால் இன்று? இப்போ? எங்கே உன் சந்தோஷம்? உன் பாதையை மாற்றியது யார்? மனிதர்களா? பணமா? செல்போனா? வேலையா? வேறு எந்தக்காரியம்? யோசித்துப்பார். இப்போதும் ஒன்றும் முடிந்துபோகவில்லை. இயேசு கிறிஸ்து உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார். உன்னை அணைக்க இருகரம் நீட்டி நிற்கிறார். இந்த அன்புள்ள தேவன் உலகிலுள்ள இரட்சிக்கப்படாத ஒவ்வொருவருக்காகவும் கண்ணீர் விடுகிறார். காத்திருக்கிறார். சிறுவர்களின் நடுவே, கிராமங்களின் நடுவே நின்று அழுது கொண்டிருக்கிறார். நீ வந்து அவரின் கண்ணீரை துடைப்பாயா? சிந்திப்போம் ! செயல்படுவோம்!!

- Mrs. பூவிதா எபினேசர்

 

ஜெபக்குறிப்பு:

நம் பத்திரிக்கை ஊழியங்கள் மூலம் அநேகர் தொடப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)