Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 17.07.2024

இன்றைய தியானம்(Tamil) 17.07.2024

 

கிறிஸ்துவா? பரபாசா?

 

“உலகத்திலும் உலகத்திலுள்ளவைளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை” - நீதி. 21:31

 

எனக்குத் தெரிந்த ஒரு சகோதரியின் கணவர் இராணுவத்தில் பணியாற்றினார். ஒருமுறை லீவுக்கு வந்தபோது மற்ற அதிகாரிகளின் மனைவிகளுடன் இணைந்து Partyக்கு வரும்படியும், குடிக்கவும் கட்டளையிட்டார். அந்த சகோதரி கிறிஸ்துவை அறிந்திருந்ததால் கிறிஸ்துவா? கணவரா? என்ற போராட்டம்! இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். கணவனுக்கு கீழ்ப்படிய ஆண்டவர் சொல்லியிருக்கிறார். ஆனால் அவருக்குப் பிரியமில்லாத காரியத்தில் கணவனுக்கு கீழ்ப்படிவதை விட தேவனுக்கு கீழ்ப்படிவதே மேல் என்று எனக்கு கிறிஸ்துவே என முடிவெடித்து அப்படிப்பட்ட மக்களுடன் செல்வதையும், குடிக்கவும் மறுத்தார். அதோடு தினமும் கண்ணீர் விட்டு தன் கணவருக்காக ஜெபித்தார். கணவரின் உள்ளத்தை தேவன் மாற்றினார்.

 

இதேபோல வேதத்திலும் கூட, நான்கு சுவிசேஷங்களிலும் "கிறிஸ்துவா? பரபாசா? " என யூத ஜனங்கள் முன் முடிவெடுக்க வேண்டிய காரியத்தை பிலாத்து நிறுத்துகிறார். ஆனால் யூத ஜனங்கள் கிறிஸ்துவை விட்டு பரபாசை தேர்ந்தெடுக்கின்றனர். அவரிடத்தில் ஒரு குற்றமும் நான் பார்க்கவில்லை என பிலாத்து கூறியும் மக்கள் பரபாசையே தெரிந்து கொண்டனர். அவன் கொலை பாதகனும், கலகக்காரனுமாயிருந்தான். ஆனாலும் அவனையே தெரிந்து கொண்டனர். அதேபோல இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் தேவர்களையும் சேவித்து வந்தபோது யோசுவா, ஜனங்களிடம் "எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள். கர்த்தரா? பாகாலா? யாரைப் பின்பற்றுவீர்கள்?" என்றார். (1இராஜா. 18:21) இதேபோல்தான் இன்று அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பெயர் சூட்டி வாரம் ஒருமுறை ஆலயம் சென்று வருகின்றனர். மேலும் பலர் நண்பர்களோடு சேரும்போது அவர்களுக்காக உலக காரியங்களில் கலந்து விடுகின்றனர். என் நெருங்கிய நண்பனை விட முடியாது. நெருங்கிய நண்பனிடம் மறுக்க முடியாது என சொல்லி உலகத்திலும் உலகக் காரியத்திலும் ஒத்துப்போய் விடுகின்றனர்.  

 

தேவ பிள்ளைகளே! இதேபோல் கிறிஸ்துவா? நண்பர்களா? என வரும்போது தெளிவான முடிவெடுங்கள். ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்திலுண்டானவைகள் என 1 யோவான் 2:16ல் பார்க்கிறோம். உலகத்தையும் உலகத்திலுண்டானவைகளையும் வெறுத்து விட வேண்டும். இப்படி நீங்கள் வாழும்போது மனிதர்களால் வெறுக்கப்பட்டாலும், ஒதுக்கப்பட்டாலும், புறம்பாக தள்ளப்பட்டாலும் மனம் தளர்ந்துபோகாதிருங்கள். அப்போது நம்மைப்போல் பாடுபட்ட கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள். நன்மையைப் பெற்றுக்கொண்ட மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டார். யார் வெறுத்து ஒதுக்கினாலும் கிறிஸ்துவுக்காக நிற்கும் போது கிறிஸ்து உங்கள் பட்சத்திலிருந்து அவரே நீதியுள்ள நியாயாதிபதியாய் நீதி செய்வார். ஆமென்.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு:

இனியவளே நிகழ்ச்சி மூலம் குடும்பத்தலைவிகள் பலர் கிறிஸ்துவுக்குள் குடும்பத்தைக் கட்டுகிறவர்களாய் மாற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)