Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 14.09.2024

இன்றைய தியானம்(Tamil) 14.09.2024

 

தந்திரம்

 

"இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்;…" - பிரசங்கி 7:29

 

ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு என பல விலங்குகளும், பறவைகளும், ஊரும் பிராணிகளும் இருந்தன. சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்தது. எல்லா விலங்குகள், பறவைகளும் சந்தோஷமாக இருந்தன. நரிக்கு தான் ராஜாவாக வேண்டும் என்ற ஆசையில் ஊருக்குள் சென்று உடம்பிற்கு வெள்ளை கலர் சாயமும், இரு கண்கள், நான்கு கால்களுக்கு சிவப்பு கலர் சாயமுமாக போட்டு வந்து நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்றது. எல்லா விலங்குகள், பறவைகளும் புதிதாய் இருக்கிறதே என பயந்து இருந்தன. சில நாட்கள் கழித்து மற்ற நரிகள் திடீரென ஊளையிட ஆரம்பித்தன. உடனே இந்த ராஜா நரியும் தன்னை மறந்து ஊளையிட்டது. நரியின் தந்திரம் வெளிப்பட்டது. இதனை பார்த்த சிங்கம், சிறுத்தை அதின் மேல் பாய்ந்து கொன்றன.

 

சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாய் இருந்தது. அதனால் பிசாசு சர்ப்பத்தின் மூலம் ஏவாளுடன் பேசி தேவன் விலக்கின கனியைப் புசிக்க வைத்தது. இதனால் ஆதாமும் ஏவாளும் தேவ மகிமையை இழந்தனர். ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறினர். சாபத்தைப் பெற்றனர். அடுத்து பார்த்தால் ஆதி 27 ல் உன் சகோதரன் தந்திரமாய் உன் ஆசீர்வாதத்தைப் பெற்றான் என ஈசாக்கு ஏசாவிடம் சொல்கிறார். இதனால் சகோதரருக்குள் பகை வருகிறது. யாக்கோபு தன் மாமன் வீட்டிற்கு செல்கிறான். பின் தன் மனைவி பிள்ளைகள், தான் சம்பாதித்த ஆடு, மாடு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன் தேசத்திற்கு திரும்பி வருகிறார். இதைக் கோள்விப்பட்ட ஏசா எதிர்கொண்டு வருகிறார். இப்போது யாக்கோபு பயந்து ஏழு விசை குனிந்து ஏசாவை வணங்குகிறான். ஆனால் இவர்கள் பிறந்த போது மூத்தவன் இளையவனை சேவிப்பான் என கொடுக்கப்பட்டது. தந்திரமாய் யாக்கோபு தன் வாழ்வில் செயல்பட்டதால் தன் சகோதரனை எதிர்கொள்ள பயம் அவனை சூழ்ந்து கொள்ளுகிறது. சுற்றிலும் இருளானது போன்ற சூழல் காணப்பட்டது. அச்சமயம் தேவனை பிடித்துக் கொண்டதால் இருள் விலகியது, பயம் மாறியது. ஆயினும் தன் சகோதரனை ஏழு விசை வணங்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

 

அருமையான தேவப் பிள்ளையே! சிலர் ஞானமாய் செயல்படுகிறேன் என சொல்லி தந்திரமாய் செயல்படுவதுண்டு. ஞானம் வேறு, தந்திரம் வேறு. ஞானமாய் செயல்படும்போது சமாதானம் சந்தோஷம் இருக்கும். தந்திரத்தை ஒழித்து ஞானமாய் நடந்தால் நம் வாழ்வில் தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேறுதலையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் காணமுடியும். தந்திரமாயிருந்து மனிதர்களை ஏமாற்றிவிடலாம். ஆனால் உள்ளத்தைப் பார்க்கும் தேவனை ஏமாற்ற முடியாது என்பதை நம் மனதில் வைத்துக் கொள்வோம்.

- R. சலோமி

 

ஜெபக்குறிப்பு: 

நமது ஆமென் வில்லேஜ் டிவி சேட்டிலைட் டி.வியாக மாற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)