Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 11.09.2024

இன்றைய தியானம்(Tamil) 11.09.2024

 

அக்சாள்

 

"…மேன்மைக்கு முன்னானது தாழ்மை" - நீதிமொழிகள் 18:12

 

ஒரு தகப்பன் யுத்தத்தில் வெற்றி பெறுபவருக்கு தன் ஒரே மகளை தருவதாகக் கூறினார். ஒரு இளைஞன் யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றியும் பெறுகிறான். தகப்பன் சொன்னது போல மகளை திருமணம் செய்து கொடுக்கிறார். அதோடு மாத்திரமல்லாது சில இடங்களையும் கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்டு தன் கணவருடன் கழுதையின் மேல் ஏறிய மகளுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, தகப்பன் எனக்கு கொடுத்த நிலங்கள் வறட்சியானவை. எனவே ஒரு வயல்வெளி இருந்தால் நன்றாக இருக்குமே என்று, உடனே கணவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தகப்பனிடம் நீர்ப்பாய்ச்சலான இடத்தை கேட்கிறாள். அவர் மிகவும் சந்தோஷமாக மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான இடத்தைத் தருகிறார். அது வேறு யாரும் அல்ல காலேபின் மகள் அக்சாள்.   

  

நம் பரம தகப்பனும் நமக்கு ஆசீர்வாதத்தை தர ஆவலாய் நம் அருகில் இருக்கிறார். நாமோ கோபம், பிடிவாதம், கௌரவம், பெருமை என்ற கழுதையில் இருந்து இறங்குவதில்லை. இவற்றில் இருந்து இரங்கினால் போதும். வேண்டிய ஆசீர்வாதங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். கழுதையிலிருந்து இறங்குவது மனத்தாழ்மையைக் காட்டுகிறது. ஆம், தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார். அவர் கிருபை கிடைத்தாலே போதும். நாம் நம்மைத் தாழ்த்தும்போது நம்முடைய பரம தகப்பன் நம் விருப்பங்களை நிறைவேற்றுவார். நம் வறட்சி செழிப்பாக மாறும். ஒரு உலக தகப்பனே மகளின் விருப்பத்திற்கு ஏற்ப மிகவும் செழிப்பானதை கொடுக்கும் போது, நம் பரம தகப்பன் நாம் நினைக்கிறதுக்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாய் கொடுக்கும் இயல்புடையவர். நம் பரம தகப்பனிடம் இல்லாதது என்று ஒன்றும் இல்லை. பூமியும் அதன் நிறைவும் உலகமும் அதில் உள்ள குடிகளும் கர்த்தருடையது. ஆகவே அவர் எதையும் தர அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். நீங்கள் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்து கேட்க வேண்டும் அதுதான் முக்கியம்.

 

இதை வாசிக்கும் சகோதர சகோதரிகளே! உங்களை தேவனுக்கு முன் தாழ்த்த முடியாதபடி இருக்கும் காரியம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். அக்சாள் கழுதையை விட்டிறங்கினாள், சகேயு காட்டத்தி மரத்தை விட்டு இறங்கினார்.. இருவரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர். அதுபோல நீங்கள் தேவனை விட்டு தூரம் போயிருந்தாலும் இன்று பரம தகப்பனிடம் தேடி ஓடி வாருங்கள். உங்களை தாழ்த்துங்கள், உங்களை அணைத்து உங்கள் வறட்சியை ஆசீர்வாதமாக மாற்றுவார். நம்மை தாழ்த்த ஆயத்தமாய் இருந்தால் ஆசீர்வாதமாக என்றும் வாழலாம். உங்கள் நிலையிலிருந்து இறங்கி பரம தகப்பனிடம் வாருங்கள். அவர் அண்டை வருகிற யாவரையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார்.

- Mrs. ஹெப்சிபா ரவிச்சந்திரன்

 

ஜெபக்குறிப்பு

நமது ஆமென் வில்லேஜ் டி.வி பார்க்கிற யாவரும் தேவனுக்காய் செயல்படுகிறவர்களாய் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)