Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 13.09.2024

இன்றைய தியானம்(Tamil) 13.09.2024

 

கன்மலையில் கல்லறை

 

"தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்" - மத்தேயு 10:39 

 

தற்போது சுற்றுலா தலங்களில் கல்லறையும் ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் சுற்றிப்பார்க்க தாஜ்மஹால் போல இடங்கள் உண்டு. பிரான்சில், பாரிஸ் நகரில் கல்லறை தோட்டமே சுற்றுலா தலமாக உள்ளது. அங்கு புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் தத்துவஞானிகள் இவர்களுடைய கல்லறை மிகவும் பணம் செலவழித்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் செல்லும் மக்கள் பாரீஸ் செல்லும்போது இவற்றை சுற்றி பார்க்காமல் செல்வதில்லை. அவர்கள் இறந்தாலும் அவர்கள் மதிப்பை, புகழை, செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாய் இந்த கல்லறை அமைந்திருக்கும். வேதத்தில் ஒருவர் கன்மலையில் தன் கல்லறையை கட்டினார். செப்னா என்பவர் அரமனை விசாரிப்புக்காரராய், பொக்கிஷக்காரராக இருந்தார். அதாவது அரமனையில் முக்கிய பொறுப்பில் நல்ல வருமானத்தில் இருக்கிறார். அவரது விருப்பம் அல்லது ஒரு தேடல் என்னவென்றால், உயர்ந்த ஸ்தலத்தில் தனக்குக் கல்லறையை வெட்டி வைக்க வேண்டும் என்பது! இதனால் மக்கள் என்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கும் படியாய் கன்மலையின் மேல், நன்கு வசதியானவர்களுக்குரிய இடங்களில் எனக்கு கல்லறையை வெட்டி வைக்கிறேன் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. அதாவது தனது தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தில் நமக்கு பெருமையாய் என்ன செய்வது? என யோசித்து கல்லறையை கட்டுகிறார்.

 

பிரச்சனைகள் இல்லாமல் ஆசீர்வாதங்கள் வரும்போது மனம் தேவனை தேடுவது குறைந்து போகிறது. இதன் அடிப்படையில் ஜீவனத்தின் பெருமை வருகிறது. வாழ்வின் நோக்கமே செல்வத்தை, ஆசீர்வாதத்தை காப்பதாக மாறிவிடக் கூடாது. உபாகமம் 6:10-12 உள்ள வசனங்களில் நீ சாப்பிட்டு திருப்தியாகும் போது கர்த்தரை மறவாதபடி எச்சரிக்கையாய் இரு என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் வசதிகள், ஆசீர்வாதங்கள் பெருகும் போது நம் மனம் அதற்கு நேராய்த் திரும்பிவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு என்கிறார். ஆசீர்வாதங்கள் பெருகும் போது மனிதனுக்கு இயல்பாய் வருவது மேட்டிமை. அதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.  

 

பிரியமானவர்களே! நமது செயல்களின் நோக்கம் என்ன? தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அன்று பாபேல் என்ற கோபுரத்தைக் கட்டினர். (ஆதி.11:4) தேவன் அதை விரும்பவில்லை. ஜனங்களை சிதறடித்தார். ஆம், நாம் செய்த செயலின் நோக்கமும், பெயர், புகழ், கனம், பெருமை, கௌரவம், அந்தஸ்து என்று இருக்குமானால் தேவன் அதில் நிச்சயம் பிரியப்பட மாட்டார். நம்முன் இப்படிப்பட்ட சிந்தை உண்டா என்று நம்மை சீர் தூக்கிபார்த்து, சீர் பொருந்துவோம்.

- Bro. சந்தோஷ்

 

ஜெபக்குறிப்பு  

மீடியா ஊழியத்தில் உள்ள ஊழியர்களுக்கு தேவன் விசேஷித்த ஞானத்தை கொடுக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)