Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 14.07.2024 (Kids Special

இன்றைய தியானம்(Tamil) 14.07.2024 (Kids Special)

 

பறவைகளும் விறகுவெட்டியும்

 

“...ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள்..." - சகரியா 7:10

 

ஒரு சிறிய கிராமத்திலே மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தினமும் விறகு வெட்டி அதை விற்று தனது பிழைப்பை நடத்தி வந்தார். அவர் தினமும் செல்கிற அந்த காட்டிற்குள் ஒரு பெரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பறவைகள், அணில்கள், தேனீக்கள் என்று நிறைய உயிரினங்கள் கூடுகட்டி வசித்து வந்தன. மணியும் விறகுகளை வெட்டிவிட்டு ஓய்வெடுப்பதற்காக அந்த மாமரத்து நிழலைத் தேடிச் செல்வார். நாளடைவில் எல்லா உயிரினங்களும் மணிக்கு நண்பர்களாகி தினமும் அவர் சாப்பிடுவதற்கு பழங்கள் கொடுத்தது.

 

ஒருநாள் அந்த ஊர் பண்ணையார் மணியை அழைத்து, எனக்கு நல்ல மரக்கட்டைகள் தேவைப்படுகிறது. இரண்டு மாட்டுவண்டி அளவிற்கு ஒரு பெரிய மரத்தை வெட்டிக்கொண்டு வா, நான் அதற்கு ஏற்றபடி நிறைய பணம் தருகிறேன் என்றார். மணியும் சரி என்று சொல்லிவிட்டு, காட்டிற்கு சென்று மரத்தை தேட ஆரம்பித்தார். தேடி தேடி அலைந்தும் பண்ணையார் கேட்டது போல் மரம் ஒன்றும் கிடைக்காததால் சோர்ந்துபோய் ஓய்வெடுப்பதற்காக அந்த மாமரத்திற்கு சென்றார். மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்த மணிக்கு ஒரு யோசனை வந்தது. பேசாமல் இந்த மாமரத்தை வெட்டிக்கொண்டுபோய் பண்ணையாரிடம் கொடுத்து நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி மரத்திற்கு அடியில் கோடாரியை வைத்து வெட்ட ஆரம்பித்தார். உடனே மாமரம், "ஐயோ! மனிதா ஏன் என்னை வெட்டுகிறாய். என் நிழலில் வந்து எத்தனை பேர் இளைப்படைகிறார்கள். ஏன் உனக்கும் கூட தினமும் நிழல் தருகிறேன். இன்னும் எத்தனை உயிரினங்கள் கூடு கட்டி வசித்து வருகிறது. Please வெட்டாதே" என்றது. மணி எதையும் காதில் வாங்கவில்லை. கொஞ்ச நேரத்திற்குள் பறவைகளும் அணில்களும் வந்து, "ஐயோ மனிதா Please வெட்டாதே. நாங்கள் இன்னும் எவ்வளவு பழம் வேண்டுமென்றாலும் பறித்துத் தருகிறோம். எவ்வளவு தேன் வேண்டுமென்றாலும் தருகிறோம். மரத்தை மட்டும் வெட்டாதே" என்று அழுதது. ஆனால் கொஞ்சம் கூட இரக்கமில்லாத மணியோ எதையும் காதில் வாங்காமல் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கிளை ஒடிந்து கீழே விழுந்தது. கிளையிலிருந்த கூட்டிற்குள் உள்ளே மூன்று குஞ்சுகள் விழுந்து செத்தது. ஒரு குஞ்சு உயிருக்கு போராடியது. உடனே தாய்பறவை குஞ்சுகளை சுற்றிச்சுற்றி பறந்து, "ஏய் மனிதா நாங்கள் உனக்கு எவ்வளவு உதவி செய்தோம். இப்படி அநியாயமாய் என் குழந்தைகளை கொன்றுவிட்டாயே" என்று கதறியது. இதைக்கண்ட மணியின் இதயம் உடைந்து, "ச்சே அற்ப பணத்திற்காக எனக்கு உதவி செய்த, என்னை நேசித்த உயிரினங்களை அழிக்க நினைத்துவிட்டேனே என்று எண்ணி அவைகளிடம் மன்னிப்பு கேட்டு இனிமேல் எவ்வளவு பணம் வந்தாலும் இப்படிப்பட்ட தவறை செய்யமாட்டேன்" என்று தீர்மானம் பண்ணினார்.

 

என்ன குட்டீஸ்! நீங்களும் உங்களை அன்பா நேசித்தவங்களுக்கும், உதவி செய்தவங்களுக்கும் எப்பவுமே தீமை செய்ய நினைக்கக்கூடாது. Ok வா!

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)