Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 10.07.2024

இன்றைய தியானம்(Tamil) 10.07.2024

 

அல்பெட்ராஸ்

 

“...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்" - ரோமர் 8:28

 

பல நேரங்களில் சிலர் இப்படிப் புலம்புவதுண்டு. ஏன் நாமும் கூட புலம்புவது உண்டு. நான் கொஞ்சம் நெட்டையா, கலரா, ஒல்லியா, கொஞ்சம் குண்டா, இன்னும் கொஞ்சம் படிச்சிருந்தா, வேற வீட்டில் பிறந்திருந்தா நல்லா இருந்திருக்குமே என்று! ஆனால் உங்களை நேர்த்தியாகத்தான் படைத்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறீர்களா? Don’t Worry.

 

அல்பெட்ராஸ் (ALBATROSS) என்னும் பறவையினத்தைப் பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அது காதல் பறவையாம். ஒரு இணையோடு மட்டுமே வாழுமாம். அது நீண்ட இறகு உடைய பறவை. மிகப் பெரிய பறவையும் கூட. மற்ற பறவைகளைப் போல பறக்க இயலாது. ஆனால் உயரமான இடங்களில் ஏறிச்சென்று விமானம் பறப்பதைப் போல பறக்க ஆரம்பிக்கும். சுமார் ஐந்து ஆண்டுகள் வரை இடைநில்லாமல் பறக்குமாம். கடல்களின் மேல் வருகின்ற மீன்கள் இதன் உணவாகும். மற்ற பறவைகளைப் போல் இவைகளின் வாழ்வு சாதாரணமானதல்ல. தேவன் அவைகளுக்குள் கொடுத்த Life Styleஐ ஏற்றுக்கொண்டு அற்புதமாய் வாழுகிறது. ஆம், நீங்களும் தேவன் உங்கள் வாழ்வில் அனுமதித்தவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வேதத்திலே ரூத் புத்தகத்தில் நகோமி என்னும் தாயாரை காணலாம். அவருடைய கணவர் எலிமெலேக்கு, தேசத்தில் உண்டான பஞ்சத்திற்கு தப்பும்படி மோவாப் என்னும் தேசத்திற்கு குடும்பத்துடன் கூட்டிச் சென்றார். நாட்கள் சென்றன. கணவன் மரித்தார், அவளுடைய இரு மகன்கள் மக்லோன், கிலியோன் மரிக்கிறார்கள். அந்நிய தேசத்தில் எல்லாவற்றையும் இழந்து தவித்து தனித்தவளானாள். தன்னுடைய தேசத்தை, ஜனத்தை, தன்னுடைய தேவனை ஆராதிக்க பெத்லகேமுக்கு திரும்பினாள். ஆம், தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தாலும் அவள் தன் தேவனை மறக்கவில்லை. தன் விதவை மருமகள் ரூத்தையும் தன்னோடு கூட வைத்துக் கொண்டாள். நம் தேவனால் அவர்கள் குடும்பத்தை ஆதரிக்க, காப்பாற்ற, தேவகுமாரன் அவர்கள் சந்ததியில் பிறக்க ஒரு திட்டம் தேவனிடத்தில் இருந்தது.

 

ஆம் எனக்கன்பானவர்களே! உங்கள் வாழ்வில் தேவன் அனுமதிப்பதை எல்லாம் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கே என்பதனை மறந்து போகாதீர்கள். சூழ்நிலை எதுவானாலும் என்ன, ஆண்டவர் பட்சமாய் திரும்புங்கள். அவரையே அண்டிக் கொள்ளுங்கள். அவரே நமக்கு அடைக்கலமானவர். உங்களை ஆசீர்வதிப்பார். வாழ்ந்திருக்கச் செய்வார். அல்லேலூயா!

- R. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு: 

நம் பணித்தளங்களில் நடைபெறும் டியூசன் சென்டர்களில் படிக்கும் பிள்ளைகளின் ஞானத்திற்காக ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)