Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 09.07.2024

இன்றைய தியானம்(Tamil) 09.07.2024

 

விசுவாசத்தால் தப்பினார்கள்

 

"அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்” - எபி. 11:34

 

சபையிலுள்ள வேதத்திற்கு புறம்பான காரியங்களை சுட்டிக்காட்டியதினிமித்தம் மார்டின் லூத்தரை சபையின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலக்கினர். மேலும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது விழுந்தது. மார்டின் லூத்தர் ஒரு நாள் காட்டில் இருந்த போது ஐந்து போர் வீரர்கள் அவரைக் கண்டுபிடித்து விட்டனர். விசுவாச வீரர் லூத்தர் அப்போர் வீரர்களைக் கண்டு பயப்படவில்லை. கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ளவராய் ஜெபித்து விட்டு தைரியமாய் அப்போர் வீரர்களுடன் பேச ஆரம்பித்தார். அவர்களும் தங்கள் பணியினை மறந்து, நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் பேசி விட்டு சமாதானத்துடன் தங்கள் தன் ஆத்துமாவில் புத்துணர்ச்சி பெற்றவர்களாய் திரும்பினர். அன்று லூத்தர் காக்கப்பட்டார். இப்படி பல முறை அவரது வாழ்வில் அவர் பிழைப்பதற்குக் காரணம், " விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்ற கேடகமே!

 

வேதத்திலும் ராஜாவைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்கக் கூடாது என பத்திரத்தில் எழுதி ராஜாவினால் முத்திரை போடப்பட்டதை அறிந்திருந்தும் தானியேல் விசுவாசத்தோடு மூன்று வேளையும், முன்பு செய்து வந்தபடியே ஜெபித்து வந்தார். சிங்கக் கெபியில் போடப்பட்டபோதும் ஜெபித்தார். அதனால் அத்தேசத்தில் உள்ளவர்கள் தானியேலின் தேவனே உயிருள்ள தேவன் என அறிந்து கொண்டனர். அதேபோல சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ பொற்சிலையை வணங்கவில்லை. கர்த்தரில் உறுதியாய் இருந்தனர். அக்கினியின் உக்கிரம் ஏழு மடங்காக்கப்பட்டு அதினின்று காக்கப்பட்டனர். எங்கெல்லாம் விசுவாசத்தோடு மக்கள் கர்த்தருக்காக வைராக்கியமாய் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தேவன் அவர்களைப் பாதுகாக்கத் தம் தூதனை அனுப்பிக் காத்தார்.   

 

இதை வாசிக்கும் பிரியமானவர்களே! நம் வாழ்க்கைப் படகில் சோதனை, வேதனை, நெருக்கங்களின் நேரத்தில் நாம் விசுவாசமாகிய நங்கூரத்தைப் போட்டு, அதை வாயினால் அறிக்கையிட்டு தேவனை நோக்கிப் பார்த்து இருக்கும் போது, அவர் நம்மை அவற்றினின்று விலக்கி அற்புதமாய், அதிசயமாய் காப்பார். அதோடு மாத்திரமல்லாது நம்மை சுற்றியிருக்கிறவர்களும் நம் தேவனின் வல்லமையை அறியச் செய்வார். “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என 1யோவான் 5:4 ல் வாசிக்கிறோம். விசுவாசத்தைக் கூட்டுவோம் உலகத்தில் வரும் இன்னல்கள், இடர்கள், கஷ்டங்கள், துன்பங்கள் வேதனைகளிலிருந்து தப்புவிக்கப்பட்டு சமாதான வாழ்வு வாழுவோம்.  

- Mrs. ஜாஸ்மின் பால்

 

ஜெபக்குறிப்பு: 

பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)