Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 08.07.2024

இன்றைய தியானம்(Tamil) 08.07.2024

 

நாம் ஆவிக்குரிய மணவாட்டி

 

"...என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீருற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்" - உன்.4:12

 

நாம் ஆவிக்குரிய மணவாட்டிகளாய், தேவனுடைய தோட்டமாக, நீருற்றாக, கிணறாக இருக்க அவர் விரும்புகிறார். கிணறு, நீருற்று தோட்டத்தை வளமுள்ளதாக்கும். கிணறும், நீருற்றும் இல்லாத தோட்டம் செழிப்பற்றதும் விரும்புவாரற்றும் இருக்கும். தோட்டத்தின் கனியினால் மணவாளனை மகிழ்ச்சியாக்க வேண்டும். மணவாளனாகிய தேவன் விரும்பும் கனி, கீழ்ப்படிதலின் கனி, அன்பின் கனி, சேவையின் கனி எதிர்பார்க்கிறார்.

 

விக்டோரியா மகாராணியார் தனது டைரி குறிப்பில் ஒளிவுமறைவின்றி தனது குடும்ப நிகழ்வுகளை எழுதிவைப்பவர். அதில் ஒரு பக்கத்திலுள்ள குறிப்பு இதோ. அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு போய்விட்டு திரும்பி அரண்மனையில் உள்ள தனது அறைக்கு வந்தபோது அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவருகே நின்று மகாராணி விக்டோரியா வந்திருக்கிறார் என்றபோது பதில் ஒன்றும் வரவில்லை. திரும்ப கதவைத் தட்டும்போது உள்ளிருந்து அவருடைய கணவர் யாரது என்று கேட்டதும் உங்கள் அன்பு மனைவி வந்திருக்கிறேன் என்றதும் கணவர் ஓடிச்சென்று கதவைத் திறந்தாராம்.  

 

அன்பை எதிர்பார்க்கும் தேவன் நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? என ஏங்கி கேட்கிறார். அவரும் நம்மிடத்தில் அன்பு காட்டுகிறார். பால்யாங்கிசோ எப்போதும் ஊழியம் ஊழியம் என்று சென்று கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி மிகவும் சோகத்துக்குள்ளாகி, சரீரம் மெலிய ஆரம்பித்தது. மனைவியின் நிலையறிந்து ஆண்டவரிடம் ஜெபிக்க ஆரம்பித்தார். ஆண்டவர் இவரிடம், "முதலில் தேவனை நேசி, இரண்டாவது உன்னை நேசி, அடுத்து ஒரே சரீரமாக மனைவியை நேசி, அடுத்து சபை மற்றும் ஊழியங்களை நேசி " என்று கூறினாராம். இது அசுத்த ஆவியின் ஆலோசனையாக இருக்குமோ என்று எண்ணும்போது, "தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்" 1 தீமோ. 3:5 என்று ஆவியானவர் தெளிவாய் பேசினாராம்.  

 

ஆம், ஒரு மனைவி கணவனிடம் எப்படி அன்பை எதிர்பார்க்கிறாளோ, அப்படியே மணவாளனாகிய இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய மணவாட்டியாகிய நம்மிடம் அன்பை எதிர்பார்க்கிறார். இயேசுவை நேசித்து வாழ்வோம். அல்லேலூயா!

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

தெபொராள் மிஷனெரிகள் செய்யும் ஊழியம் அனைத்திலும் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)