இன்றைய தியானம்(Tamil) 03.12.2023
இன்றைய தியானம்(Tamil) 03.12.2023
இயேசுவின் சாயல்
"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என்நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்;" - மத்தேயு 11:29
Hello, குட்டி செல்லங்களே! எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்க ஸ்கூல் ல உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்களா? Super. இன்றைக்கும் இரண்டு நண்பர்களைக் குறித்த கதையைத் தான் சொல்லப் போறேன். நீங்க கேட்க ரெடிதானே!
ஜோசப், ஜோயல் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள். ஸ்கூலில் ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருப்பாங்க. ஆனால் ஜோசப் நல்லா படிப்பான், எதுக்கெடுத்தாலும் இயேசப்பாகிட்ட Prayer பண்ணுவான். ஜோயல் என்ன சொல்லுவான் தெரியுமா? கடவுளுக்கும், நமக்கும் சம்பந்தமே கிடையாதுப்பா என்று சொல்லி விடுவான். படிப்பிலும் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டான். என்ன குட்டிசெல்லங்களே! நீங்க எப்படி இருப்பீங்க . . . Daily Jesus கிட்ட Prayer பண்ணனும் சரியா? ஜோயல் சரியா படிக்காம ஏதோ Just pass ஆகி கிடைச்ச சின்ன வேலைக்கு போனான். நாட்கள் கடந்தன. சில வருடங்களில் ஜோசப் மேல் படிப்பை படித்து முடித்தான். வேலை கிடைக்கும் வரை சின்ன சின்ன வேலைகள் எதுவானாலும் கற்றுக் கொண்டே இருந்தான். அவன் எதிர்பாராத நேரத்தில் அரசாங்க வேலையும் கிடைத்தது. ஒரு நாள் ஜோசப் ரோட்டில் போய் கொண்டிருக்கும்போது, கையில் பிய்ந்த செருப்புடன், காலை சரியாக ஊன்றி நடக்க முடியாமல் ஒருவர் வந்து கொண்டிருந்தார். யாரென்று பார்த்தால் ஜோயல் தான் அது. நண்பா என்று ஜோயலை அணைத்துக் கொண்டான். சின்ன வயது நண்பன் ஜோசப் என்பதை அறிந்து கொண்டான் ஜோயல். இவ்வளவு டிப்டாப்பா அழகா இருக்கானே! ஆனா சாதாரணமான என்னையும் நேசிக்கின்ற அன்பு அவனுக்குள் இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டான். வா என்னோட வீடு பக்கத்துலதான் இருக்குது என்று ஜோயலை அழைத்துக் கொண்டு போனான் ஜோசப். இரண்டு நாட்கள் தங்கவைத்து அன்புடன் உபசரித்தான்.
மறுநாள் காலையில், நான் ஊருக்கு கிளம்புகிறேன். இங்கு பக்கத்தில் செருப்பு தைப்பவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரித்தான். இதோ உன் செருப்பு என்று செருப்பை அழகாய் தைத்துக் கொடுத்தான். அப்பாடா இந்த வேலையும் உனக்குத் தெரியுமா? என்று ஆச்சரியப்பட்டான் ஜோயல். சின்ன சின்ன வேலைகள் கற்றுக் கொண்டேன். எனக்கு தெரிந்ததை செய்தேன் அவ்வளவு தான் என்றான். இவ்வளவு தாழ்மை, அன்பு எப்படி வந்தது. நீ தினமும் ஜெபித்து இயேசப்பா பிள்ளையாய் இருப்பதால் தான் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறாய். நீ சொல்லாமலே உன் வாழ்க்கை எனக்கு பாடம் கற்பித்து கொடுத்தது நண்பா, உன்னை சந்தித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று கிளம்பினான் ஜோசப். இயேசப்பா கூடவே இருக்கிறதினாலே அவரோட சாயலாகவே மாறிட்டான் என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு, நானும் இயேசுவை உண்மையாய் தேடப் போகிறேன் என்று நடக்க ஆரம்பித்தான். குட்டி செல்லங்களா! இயேசப்பாவோட அன்பு தாழ்மை, பொறுமை, இரக்கம் . . . இன்னும் அநேக குணங்கள் உங்களிடம் காணப்பட தினமும் அவர்கிட்ட பேசணும். அப்பத்தான் அவர் சாயலாய் மாற முடியும். சரியா, குட்டீஸ்!
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864