Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 26-10-2021

இன்றைய தியானம்(Tamil) 26-10-2021

 

ஜெபித்த சிறுவன் 

 

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” –நீதிமொழிகள் 22:6

 

அன்னாள் என்ற தாய் தனக்கு ஒரு மகன் வேண்டுமென ஜெபித்ததற்கு பதிலாகப் பிறந்தவன் சாமுவேல். கருவிலிருந்தது முதல் ஜெபம் அவனை சூழ்ந்திருந்தது. அவன் பிறந்ததிலிருந்து ஜெபத்தின் சூழ்நிலையிலேயே இருந்தான். ஜெபத்தில் கருத்தூன்றிய தாயின் பாதுகாப்பில்தான் சாமுவேல் வளர்க்கப்பட்டான். வளர்ந்தபின் பொருத்தனை செய்தபடியே கர்த்தருடைய ஊழியத்திற்கென ஆலயத்தில் ஆசாரியனான ஏலியின் பொறுப்பில் விடப்பட்டான்.

 

துவக்கத்திலிருந்தே கர்த்தரின் சத்தத்தைக் கேட்கக்கூடிய இடத்தில்தான் சாமுவேல் இருந்தான். முதலில் தேவகுரலை அறிந்து கொள்ளவில்லை என்பது உண்மையெனினும் உணர்ந்தபிறகு, "கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்" என்று கூறியதிலிருந்து இளவயதிலேயே கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ஜெபிக்கும் பழக்கம் உடையவனாயிருந்தான் என்பது தெளிவாகிறது. 

 

சாமுவேல் சிறுவனாயிருக்கும்போதே ஆண்டவரைச் சேவிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் பழகியதால், வளர்ந்து வந்தபோது "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பது போல தொடர்ந்து அவனை ஒரு ஜெபவீரனாக மாற்றியது. ஜெபிக்கும் பழக்கமுடைய தாய்க்கு பிறக்கும் பிள்ளைகள் இளவயதிலேயே ஆண்டவருக்கு கீழ்ப்படியவும் அவரை சேவிக்கவும் கற்றுக் கொள்வார்களென்பது உறுதி. சபையில் திறப்பிலே நிற்கும் ஜெபவீரர்கள் தேவையெனில் அதற்கு விண்ணப்பிக்கும் தாய்மார்களும், மன்றாடும் குடும்பங்களும் தேவை. ஜெபிக்கும் பழக்கமுடைய பிள்ளைகள் அநேகமாய் சாமுவேலைப் போல ஜெபிக்கும் தாய்மாருக்குப் பிறந்தவராகவே இருப்பர். ஜெபிக்கும் தலைவர்கள் உருவாகுவதும் ஜெபிக்கும் இல்லங்களிலேதான்! 

 

பிரியமானவர்களே! தேவனுக்கு இடந்தராத ஒரு உலகப்பற்றுள்ள தாயால் உலகத்தை சேவிக்கும் ஒரு குடும்பத்தில் சாமுவேல் வளர்ந்திருந்தால் அவன் எப்படி இருந்திருப்பான்? அன்னாள் சாமுவேலைக் குறித்து அவனுடைய இளவயதில் எடுத்த முயற்சி பின்னால் அவன் ஜெபவீரனாய் மாறுவதற்கு காரணமாயிற்று. உங்கள் பிள்ளைகளும் இளம் பிராயத்திலேயே ஆண்டவருக்கு கீழ்ப்படிய நீங்கள் விரும்பினால், அவர்களுக்காக அன்னாளைப் போல ஜெபியுங்கள். குடும்பமே ஒரு பிள்ளையின் வெற்றியுள்ள வாழ்விற்கு முதற்படியாய் அமைய முடியும். குடும்ப ஜெபமில்லாத வீடு கூரையில்லாத வீடல்லவா? மேலும் பிள்ளைகளை தவறாமல் தேவாலயத்திற்கும், ஞாயிறு பள்ளிக்கும் அனுப்புங்கள். உங்கள் இல்லத்திலும் எழுப்புதலின் மகனாகிய சாமுவேல் உருவாவான் என்பதில் சந்தேகமில்லை. 

- E.M. பெளண்ட்ஸ் 

 

ஜெபக்குறிப்பு:

சுவிசேஷ ஊழியத்திற்கு தேவையான கைப்பிரதிகள், புதிய ஏற்பாடுகள், சுவிசேஷப் புத்தகங்கள், முழு வேதாகமங்கள் கிடைக்கப் பெற ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)