இன்றைய தியானம்(Tamil) 24-10-2021 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 24-10-2021 (Kids Special)
பாவத்தை மறைக்காதே
“நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.” – 1யோவான் 1:8
அன்பு செல்லங்களே! எப்படி இருக்கீங்க. நல்லா இருப்பீங்கன்னு இயேசப்பாவுக்குள் நம்புகிறேன். 9th to 12th std வரை school ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கு இன்னும் ஆரம்பிக்கலைன்னு கவலையா இருக்கா? உங்களை Jesus ரொம்ப நேசிக்கிறதுனால பத்திரமா, பாதுகாப்பா வைத்திருக்காங்க. நீங்களும் prayer பண்ணுங்க. கொரோனா வியாதி முற்றிலும் அழிந்து normal நிலைக்கு வரணும். இந்த இரண்டு வருஷத்தில் எதெல்லாம் கிடைக்கலையோ அதையெல்லாம் இயேசப்பா உங்களுக்கு தரப்போறாங்க. நிச்சயமா Jesus உங்க ஜெபத்திற்கு பதில் கொடுப்பாங்க. சரி, கதை கேட்கலாமா?
ஒரு வீட்டில் அப்பா, அம்மா, விக்கி தம்பி என மூன்று பேர் இருந்தாங்க. அவங்க வீட்டிற்கு ஒரு ஊழியர் ஜெபிக்க வருகிறது வழக்கம். அன்றைக்கு விக்கி வீட்டுக்கு prayer பண்ண வந்தவர் எதையோ தேடிக்கொண்டிருந்தார். “ஐயோ, பேக்-கையும், குடையையும் பக்கத்து வீட்டில் ஜெபம் பண்ணிட்டு மறந்து வச்சுட்டு வந்துட்டேனே. சரி விக்கி, நாலு வீடு தள்ளி Jeba Aunty வீட்டில்தான் இருக்கும், எடுத்துட்டு வர்றியாப்பா”ன்னு கேட்டாங்க. உடனே விக்கி, “Ok, Pastor. இப்பவே போய் எடுத்துட்டு வர்றேன்”னு வேகமா ஓடினான். பேக்கையும், குடையையும் வாங்கிக் கொண்டான் விக்கி. குடையை தோள் மேல் வைத்துக் கொண்டு, அதன் கைப்பிடியில் பேக்கை தொங்கவிட்டு டொய்ங், டொய்ங் ன்னு ஆட்டிக்கொண்டு நடந்து வந்தான். சிறிது நேரம் கழித்து குடையோட கைப்பிடி உடைந்து, பேக் கீழே விழுந்து அழுக்காயிடுச்சு. பயந்துபோய் பின்பக்கமா வந்து அப்பா, அம்மாகிட்ட சொல்லி அழுதுவிட்டான்.
“சரி, விக்கி அழாதே! நான் போய் pastor கிட்ட சொல்றேன். நீ பயப்படாதே”ன்னு அப்பா சொன்னாங்க. “Sorry pastor விக்கி தப்பு பண்ணிட்டான்” என்று அப்பா நடந்ததை சொன்னாங்க. இந்த விஷயத்தை கேட்ட pastor, “இதனாலென்ன பரவாயில்ல விக்கி, இங்க வாயேன்” என்று பக்கத்தில் உட்காரவைத்து இயேசப்பாவின் மன்னிப்பை பற்றி சொல்லிக் கொடுத்தாங்க. “நீ செய்த தவறை பெற்றோரிடம் தைரியமாய் சொன்னாயல்லவா? இப்படித்தான் இருக்கவேண்டும். அப்பா உனக்காக என்னிடம் பரிந்து பேசினாங்கதானே. இதுபோலத்தான் Jesus நமக்காக பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டே இருக்காங்க. தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளை மனதார இயேசப்பாகிட்ட சொல்லணும். நம் பாவங்களை மன்னித்து நல்ல பிள்ளைகளாய் வாழ இயேசப்பா உதவி செய்வாங்க. நாம பரலோகம் செல்ல வழிகாட்டி Jesus மட்டும்தான் விக்கி” ன்னு pastor சொன்னதும், விக்கி வேகமா தலையை ஆட்டினான். குடும்பமாக இணைந்து ஜெபித்தார்கள். “எங்கள் பாவங்களை மன்னித்து பரலோகம் கொண்டு சேர்க்கும் இயேசுவே உம்மை பின்பற்ற எங்களுக்கு உதவிசெய்யும்” என்று ஜெபித்து தங்களை அர்ப்பணித்தார்கள்.
செல்ல குட்டிகளே! இந்த விக்கியை போல செய்த தவறை மறைக்காம உண்மையா அறிக்கையிடணும். மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் மனதார மன்னித்து தம் பிள்ளையாய் மாற்றும் இயேசு கிறிஸ்துவிடம் வர தயங்கவே கூடாது. Ok.
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250