Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 15-10-2021

இன்றைய தியானம்(Tamil) 15-10-2021

 

யோசேப்பா? சிம்சோனா?

 

“உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.” – நீதிமொழிகள் 6:25 

 

 கற்பு என்பது ஆண், பெண் இருபாலருக்குமே பொதுவானது. அது கண்களிலேயே தொடங்கிவிடுகிறது. ஆகவேதான் இயேசு கிறிஸ்து கூறும்போது, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு பாவம் செய்தாயிற்று” என்று கூறுகிறார். இன்றும் நமக்கு நன்கு அறிமுகமான யோசேப்பு, சிம்சோன் என்ற இருவாலிபர்களின் கண்களை மட்டும் focus பண்ணி பார்ப்போம். 

 

யோசேப்பு கம்பீரமான அழகான தோற்றமுள்ள வாலிபன். எகிப்திற்கு அடிமையாக விற்கப்பட்ட அவனோடு கர்த்தர் இருந்தார். ஆண்டவரின் அழகான கண்கள் தன்னைப் பார்த்துக்கொண்டே இருப்பதை அவனது மனக்கண்களில் கண்டான். ஆகவேதான் பெற்றோர், குடும்பம் அருகில் இல்லாவிட்டாலும் கர்த்தருக்கு பயப்படும் பயம் அவனுக்குள் இருந்தது. அதுவே அவனது பல உயர்வுகளுக்கும், பயங்கரமான பாவத்தில் அவன் விழாமல் காக்கப்பட்டதற்கும் காரணமாயிற்று. வெளியே யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிற்றின்ப வாழ்க்கை வலிய வந்தால் ஒரு வாலிபன் என்ன செய்வான்? ஆனால் அவனோ, “என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கும் என் தேவனுக்கு விரோதமாய் நான் பாவம் செய்வது எப்படி?” என்று பாவத்தை விட்டு விலகி ஓடிவிட்டான். 

 

சிம்சோன் பெலிஸ்தியரின் கையினின்று இஸ்ரவேலரை மீட்கும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இரட்சகன். ஆனால் தான் பிறந்த நோக்கத்தை மறந்து, தன் கண்களுக்கு பிரியமான பெண்களின் மீதெல்லாம் ஆசைப்பட்டு, மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தான். பெற்றோர் கூடவே இருந்தும், கர்த்தருக்குப் பயப்படும் பயம் அவனுக்குள் இல்லாததால் பரிசுத்தத்தைக் குறித்த வாஞ்சையுமில்லை, அதன் முக்கியத்துவத்தை உணரவுமில்லை. ஆகவே தன் உடலை கறைப்படுத்துவது பற்றிய கவலையுமில்லை. முடிவு பரிதாபம். 

 

வாலிபரே! நீங்கள் யாரைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? யோசேப்பைப் போலவா? அல்லது சிம்சோனைப் போலவா? பெற்றோரோடு இருந்து அவர்களின் ஆலோசனையை உதாசீனப்படுத்தி, ஆண்டவருக்கு பயப்படும் பயமின்றி துணிகரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? கண்களிலும் இருதயத்திலும் இடம்கொடுக்கும் பாவத்திற்கு உடலை கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? சிம்சோனின் வாழ்க்கை நமக்கொரு எச்சரிக்கை! சமூக வலைதளங்களின் மூலம் திருமணமான ஆண்களும் பெண்களும் கூட பாவ இச்சைக்கு அடிமையாகி மோசம் போகிறார்கள். ஆகவே பாவத்தை கண்களிலேயே தடுத்து நிறுத்திவிடுங்கள். இருதயத்தில் No Entry போர்டை மாட்டிவிடுங்கள். யோசேப்பைப் போல உங்களை பரிசுத்தமாய் காத்துக்கொள்ளுங்கள். 

- Mrs. சரோஜா மோகன்தாஸ்

ஜெபக்குறிப்பு: 

மீடியாவில் நவீன தொழில் நுட்ப அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் நம்முடன் இணைய ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)