இன்றைய தியானம்(Tamil) 10-10-2021 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 10-10-2021 (Kids Special)
பட்டாம்பூச்சி
“இதோ! என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;” – ஏசாயா 49:16
செல்லக்குட்டி பிள்ளைகளா? உங்களையெல்லாம் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. இந்த கதையின் மூலமா உங்களை சந்திப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஞாயிறுதோறும் கற்று கொள்கின்ற பாடலை மறக்காம பாடுறீங்களா? நீங்க பாட்டு பாடினா சத்துருவான பிசாசு நடுங்கிப் போயிடுவான். நீங்க Jesus-ஐ துதித்து பாடுவதில் அவ்வளவு வல்லமை இருக்கு. இதனால் பாடல்களை மறக்காம பாடிக்கிட்டே இருங்க. சரி இன்றைக்கு பட்டாம்பூச்சி கதை கேட்கலாமா?
School-க்கு போகாம ரொம்ப நாட்கள் leave-ல இருக்கிறதால ரொம்ப bore அடித்தது இரண்டு நண்பர்களுக்கு. அவங்க இருக்கிற கிராமம் ரொம்ப அழகா பசுமையா இருக்கும். வயல்வெளி பக்கமா நடந்து walking போயிட்டு வருவோமென்று இரண்டு பேரும் நடந்து போனாங்க. Super-ரா குளுமையா காற்று வீசினது. பட்டாம்பூச்சி, தட்டான் எல்லாம் பக்கத்துல பறந்து இரண்டு பேரும் கைநீட்டி பிடிக்க முயற்சி செய்தாங்க. நீங்களும் பட்டாம்பூச்சி பிடிக்க ஆசைப்படுவீங்கதானே! ஓ... பிடிச்சு விளையாடியிருக்கீங்களா? கலர்கலரா இருக்கும், பார்க்கவே சந்தோஷமா இருக்கும் அப்படித்தானே!
ஒரு தம்பி பட்டாம்பூச்சியை பிடித்து விட்டான். டே! நண்பா உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் சொல்லுவியா? இந்த பட்டாம்பூச்சி என் கைக்குள்ளே உயிரோடே இருக்கிறதா? செத்து போச்சான்னு கேட்டான். நண்பன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, உயிரோடே இருக்குதுன்னா நசுக்கி கொன்னுடுவான். செத்து போயிடுச்சுன்னு சொன்னா உயிரோடே பறக்க விடுவான் என்று நண்பன் யோசித்து விட்டு, அந்த பட்டாம்பூச்சி உயிரோடே இருப்பதும், செத்துப்போவதும் உன் கையில் தான் இருக்கிறது என்று நச்சுன்னு பதில் சொன்னான். நன்றாக பதில் சொன்னாய் நண்பா! பட்டாம்பூச்சியே பயப்படாதே பறந்து போ என்று அழகாய் பறக்கவிட்டான்.
அன்பு தம்பி-தங்காய்! பட்டாம்பூச்சிக்கு ஆபத்து வந்து விடக் கூடாதென்று, நண்பன் ஞானமாய் பதில் சொன்னான் பார்த்தாயா! இயேசப்பா உங்களை உள்ளங்கையில் வரைந்திருக்கிறார். அவர் உங்களை பத்திரமாய் பாதுகாத்துக் கொள்வார். நீங்க இயேசப்பா கரத்தில் உங்களை அர்ப்பணிக்கணும். இயேசப்பா கரத்தில் இருந்து யாரும் உங்களை பறிக்க முடியாது. சாத்தானின் கையில், தீயவர்களின் கையில் சிக்கிக் கொள்ளாதபடி காத்துக் கொள்ளும் ஆண்டவரே! என்று ஜெபிக்க மறக்கவே கூடாது. பட்டாம் பூச்சியைப் போல, படபடவென்று பறந்து பலருக்கும் சாட்சியாய் வாழ வாழ்த்துகிறேன். Bye குட்டீஸ்!
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250