இன்றைய தியானம்(Tamil) 05-10-2021
இன்றைய தியானம்(Tamil) 05-10-2021
உழைப்பு
“தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்...” - நீதி.12:11
சோச்சிரோ ஹோண்டா என்பவர் டோயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசைப்பட்டார். 1928-ம் ஆண்டு அதை உருவாக்கினார். ஓராண்டு உழைத்து உருவாக்கிய மாதிரி பிஸ்டனை பெரிய எதிர்பார்ப்புடன் டோயோட்டோ கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். ஆனால் எதிர்பார்ப்பிற்குரிய தரம் உங்கள் பிஸ்டனில் இல்லையென நிராகரிக்கப்பட்டார். என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து அவர்களின் தரத்திற்கேற்ப பிஸ்டனை தயாரித்துக் கொடுத்தார். ஆனால் உலகப்போர் காரணத்தால் தொழிற்சாலை கட்ட கலவை கிடைக்கவில்லை. மாற்று கலவை கண்டுபிடித்து தொழிற்சாலை கட்டினார். அமெரிக்கா போட்ட குண்டினால் தொழிற்சாலை தரைமட்டமானது. மூலப் பொருட்களை டோயோட்டா கம்பெனிக்கு விற்றார். பெட்ரோல் விலையேற்றத்தால் எல்லோரும் சைக்கிள் பயன்படுத்தினர். இவர் வீட்டிலிருந்த புல்வெட்டும் இயந்திரத்தின் மோட்டாரைக் கழற்றி சைக்கிளில் மாட்டி ரோட்டில் வியாபாரம் செய்தார். எல்லோரும் தனக்கும் இதைப்போல் வேண்டுமெனக் கேட்டனர். இதன் விளைவுதான் ஹோண்டா மோட்டார் சைக்கிள். இன்று அதன் விற்பனை நமக்கே தெரியும்.
வேதம் சொல்லுகிறது, தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான் என்று! ஆம், நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். நாம் உழைக்கின்ற உழைப்பு ஒரு நாளும் வீணாவதில்லை. சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும் எனவும் வேதம் கூறுகிறது. தேசம் முழுவதும் பஞ்சம் இருந்தபோதும் ஈசாக்கு நிலத்தை உழுது விதைவிதைத்தார். நூறு மடங்கு பலன் அடைந்தார்.
அன்பானவர்களே! நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்களா? அல்லது உழைத்துக் கொண்டேயிருக்கிறீர்களா? தொடர்ந்து உழைத்தால் பலன் நிச்சயம். ஏமாற்றங்கள் மற்றும் எதிரான சூழலிலும் சோச்சிரோ ஹோண்டாவைப் போல், ஈசாக்கைப் போல் சோர்ந்து விடாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு உழைத்துக் கொண்டே இருந்தால் புதிய புதிய திட்டங்கள் கிடைக்கும். நாமும் முன்னோக்கிச் செல்லலாம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்கள் பணிசெய்யும் கிராமங்களில் அற்புத அடையாளங்கள் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250