இன்றைய தியானம்(Tamil) 03-10-2021 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 03-10-2021 (Kids Special)
கிறிஸ்துவுக்காக நிமிர்ந்து நில்
”நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.” – நீதிமொழிகள் 4:18
Hai! குட்டீஸ், ஊருக்குப் போகணும் என்றால் உங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தானே! அதுவும் உங்க மாமா அல்லது பாட்டியம்மா வீட்டிற்கெல்லாம் சென்றால் நீங்க இன்னும் Jolly யா இருப்பீங்கதானே.
அதே போலத்தான் தீபக் என்ற தம்பி தனது மாமா வீட்டிற்கு சென்றிருந்தான். மாமா வீட்டில் உள்ள குட்டி தம்பியிடம் சந்தோஷமாக விளையாடினான். மாமா அவனை கடைத் தெரு, park-க்கு இன்னும் அநேக இடங்களுக்கு கூட்டிச் சென்றார்கள். எல்லாம் அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மாமா தீபக்கிடம், “தீபக் நீ நன்றாக வேதம் வாசித்து ஜெபிக்கிறாயா? கர்த்தருடைய பிள்ளையாய் வாழ்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு தீபக், “friends உடன் ஜாலியாக இருந்துவிட்டு, பின்பு இயேசு கிறிஸ்துவின் வழியில் நடப்பேன்” என்றான். மாமாவும் தலையை ஆட்டினார்.
பின்பு மாமாவும், தீபக்கும் car-ல் தீபக்கின் ஊருக்கு சென்றனர். ஊரின் அருகில் இரண்டு பாதைகள் பிரியும். ஒன்று ஊருக்குள் செல்லும். மாமா அந்த காட்டினுள் செல்லும் பாதையில் car-ஐ ஓட்டிச் சென்றார். தீபக் மாமாவிடம், “மாமா, இந்த பாதை தவறு. இது காட்டினுள் செல்லும். சரியான பாதையும் கிடையாது” என்றான். அதற்கு மாமா “எனக்குத் தெரியுமே! இந்தக் காடு ரொம்பவும் அழகாக இருக்கும். எனவே கொஞ்ச தூரம் காட்டினுள் சென்று, அதன் அழகை ரசித்து விட்டு திரும்புவோம்” என்றார். சூரியன் மறைய துவங்கிற்று. “மாமா, மாமா இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்ட துவங்கி விடும். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. திரும்பி விடுவோம்” என்றான். மாமாவோ “இங்கு பயங்கரமான காட்டு மிருகங்கள் எல்லாம் உண்டே, ஏதாவது ஒன்றையாவது பார்த்துவிட்டு சென்று விடுவோம்” என்றார்.
தீபக் சொன்னான், “மாமா, யானை வந்தால் நமது காரை கூட உருட்டி தள்ளிவிடும். சென்ற வாரம் சிறுத்தைப் புலி ஒன்று மரத்தின் பின்னால் நின்று திடீரென்று பாய்ந்து ஒருவரை கொன்றுவிட்டது. வாங்க மாமா திரும்பி விடுவோம்” என்றான்.
உடனே மாமா தீபக்கிடம், “நீ மாத்திரம் இந்த உலக சந்தோஷத்தை கொஞ்ச நாள் அனுபவித்து விட்டு, பின்னர் கிறிஸ்துவின் வழியில் நடக்கிறேன் என்று சொன்னாயே. நீ திரும்பி வருவதற்குள், அது உனது ஆத்துமாவை அழித்துவிடுமே! எனவே இன்றிலிருந்து இயேசப்பா பிள்ளையாக இருப்பாயா?” என்று கேட்டார். அப்போதுதான் தீபக் தனது தவறை உணர்ந்தான்.
அன்பான தம்பி-தங்கச்சி, நீங்களும் இயேசப்பாவுக்கு பிரியமான வழியில் நடப்பீங்கதானே! Thank you. Holy life is a Jolly life.
- A. பியூலா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250