Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 01-10-2021

இன்றைய தியானம்(Tamil) 01-10-2021

 

அம்மாவின் ஆலோசனை 

 

“...தாயின் போதகத்தைத் தள்ளாதே.” – நீதிமொழிகள் 1:8 

 

க்ளென் கன்னிங்ஹாம் என்ற சிறுவனுக்கு தகப்பனார் இல்லை. தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தான். “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்”, “விசுவாசிக்கிறவன் பதறான்” என்ற வசனங்களை சிறுவயதிலேயே அவன் மனதில் ஊன்றப் பதித்துவிட்டார்கள் அவன் தாய். க்ளெனுக்கு ஒலிம்பிக் கால்பந்தாட்ட சாம்பியனாக ஆசை. “எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடாதே” என்று அவன் தாய் சொல்லாமல், “ஆண்டவரிடம் விசுவாசமாயிரு. அவருக்குப் பிரியமான, உன்னால் முடிந்த நற்காரியங்களைச் செய், கர்த்தர் உன் இருதய வாஞ்சையை நிறைவேற்றுவார்” என்றார்கள். 

 

அயர்லாந்திலுள்ள சிறிய கிராமத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் க்ளென். ஏழை மாணவர்கள் தான் அப்பள்ளியில் படிப்பார்கள். குளிரைத் தாங்கும் சரியான ஆடைகள் அவர்களிடம் இல்லாததால் குளிரினால் வகுப்பில் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். மதியம் 1 மணிக்கு School முடிந்தவுடன் க்ளென் காய்ந்த குச்சிகளை பொறுக்கி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பத்திரப்படுத்தி, காலையில் வேகமாக புறப்பட்டு 7 மணிக்கு பள்ளிக்குச் சென்று நடுவில் குச்சிகளை எரித்து அந்த சிறிய கட்டிடத்தை சூடாக்கி வைத்துவிடுவான். இதில் ஏழை மாணவர்கள் மகிழ்ச்சியடைவது அவனுக்கு மனதிருப்தியைக் கொடுக்கும். ஆண்டவருக்கு நன்றி சொல்லுவான்.  

 

ஒருநாள் தீ மூட்டி வைத்துவிட்டு அதிகாலை எழுந்த களைப்பில் பெஞ்சில் படுத்து அயர்ந்து விட்டான். காற்றில் ஆடிய திரைச்சீலையில் தீப்பிடித்து பெரிய விபத்து நடந்ததில் க்ளென் கால்கள் நடக்கும் தன்மையை இழந்தன. சக்கர நாற்காலியில் பள்ளிக்கு வந்தான். இரண்டு மாதங்கள் கழித்து ஆண்டவரிடம் ஜெபித்து விட்டு விசுவாசத்தோடு வண்டியிலிருந்து குதித்து வேலியைப் பிடித்து கால் நடுங்க நின்றான். பின் ஒரு வாரத்திற்குள் பிடித்துக்கொண்டு நடந்தான். அவன் அம்மா சொல்லியிருந்த “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” என்ற வாக்குத்தத்தத்தை சொல்லிச் சொல்லி கடும் பயிற்சி எடுத்த பிறகு, ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டு இரண்டு கோல் போட்டு சாம்பியனாக மாறினான்.  

 

பிரியமானவர்களே! உலகமே அதிசயித்துப் பார்க்கும் வண்ணம் க்ளென் உயர்த்தப்படக் காரணம், சிறுவயதில் தாயார் கற்றுக்கொடுத்த போதனை, விசுவாச வார்த்தைகள், கர்த்தருக்குப் பிரியமாய் நடப்பது. ஆம், நம் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட, உயர்த்தப்பட பெற்றோரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவது மிக முக்கியம். இதை வாசிக்கும் நாமும் பெற்றோரின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்போம், ஆசீர்வாதமாய் வாழ்வோம். 

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு:

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)