இன்றைய தியானம்(Tamil) 29-09-2021
இன்றைய தியானம்(Tamil) 29-09-2021
பெற்றோர்கள் கவனத்திற்கு
“நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி...” - தீத்து 2:7
ஒரு கல்லூரியில், ஏழை குடும்பத்தை சார்ந்த இரு சகோதரர்கள் படித்தார்கள். அண்ணன் படிப்பில் கவனம் செலுத்தாமல், குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். வீட்டில் உள்ளவர்களை மிரட்டி பணம் வாங்கி குடிப்பதே அவனது வழக்கம். ஆனால் தம்பியோ படிப்பில் ஆர்வமும் கல்லூரியில் மதிக்கப்படுபவனாகவும் இருந்தான். கல்லூரி பேராசிரியருக்கு ஒரே வியப்பு. ஒரே குடும்பத்தில் ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவருக்கும் இவ்வளவு வேறுபாடா, தம்பி நல்லவனாகவும், அண்ணன் ஊரே தூற்றும் அளவுக்கு கெட்டவனாகவும் இருக்கிறானே என்று. பேராசிரியர் இருவரையும் அழைத்து, “உங்கள் நடத்தைக்கு யார் காரணம்?” என்று கேட்டபோது இருவருமே ஒரே பதிலை சொன்னார்கள். “என் நடத்தைக்கு காரணம் என் அப்பா” என்று. “அப்பா என்ன செய்தார்?” என்று அண்ணனிடம் கேட்டபோது, “எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே இரவும் பகலும் குடித்துவிட்டு சண்டை போடுவார். நான் வாங்கிய அடிக்கு பஞ்சமே இல்லை. அவர் பிள்ளையாய் இருக்கிற நான் எப்படி இருப்பேன். அதனால் நானும் குடிகாரனாகி விட்டேன்” என்றான். தம்பியிடம் கேட்ட போது, இதே பதிலைத்தான் சென்னான். “ மோசமான தகப்பனின் பிள்ளையாகிய நான் மோசக்காரனாகி விடக்கூடாது என்று நினைத்தேன். என் நடத்தைக்கு முழு காரணம் என் அப்பாதான்” என்று சொன்னான்.
எனக்கன்பான பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறீர்கள்? நாம் தியானித்த பகுதியில் சொல்லப்பட்டபடி பிள்ளைகளின் கண்களுக்கு முன்பு எப்படிப்பட்ட சாட்சியாக இருக்கிறீர்கள்? பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்து தான் வளர்கிறார்கள். உங்கள் நடத்தை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள். பிள்ளைகளிடம் பட்சபாதம் காட்டுகிறீர்களோ? இது மிகவும் தவறானது. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் சரி, அவர்களை சரிசமமாக நடத்த பழகிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு துர்கிரியைகளுக்கு அல்ல, நற்கிரியைகளுக்கே மாதிரியாக இருங்கள். அதன்படி பிள்ளைகளுக்கும் வாழ கற்றுக்கொடுங்கள். இதனால் தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற முடியும். ஏனென்றால் ஒரு பிள்ளை நல்ல வழியில் நடப்பதற்கும், தீய வழியில் நடப்பதற்கும் காரணம் பெற்றோர்கள் தான். எனவே பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை எந்த வழியில் நடத்த போகிறீர்கள், உங்கள் பிள்ளைகளை எந்த வழியில் நடந்த போகிறீர்கள், உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக நல்ல மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்...
- Mrs. எஸ்தர் காந்தி
ஜெபக்குறிப்பு:
நமது இராக்லாண்ட் பைபிள் காலேஜில் பயிலும் மாணவர்களுக்காக, தேவகரத்தில் கருவியாக பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250