இன்றைய தியானம்(Tamil) 19-09-2021 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 19-09-2021 (Kids Special)
DON’T WORRY
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்;…” -சங்கீதம் 139:14
ஒரு அடர்ந்த காட்டில் விலங்குகள், பறவைகள் மற்றும் சின்னச் சின்ன பிராணிகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. காட்டின் நடுவில் ஒரு குளமும் இருந்தது. மீன்கள், தவளைகள் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்ப்பதற்கு மிகவும் அருமையான காட்சியாக இருந்தது. இந்த காட்டில் இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. உங்களுக்கும் நண்பர்கள் இருக்காங்கதானே! அவங்க கூட பேசிக்கிட்டே இருப்பீங்க, ஜாலியா விளையாடுவீங்க இல்லையா? அதுபோலத்தான் நண்பர்களான முயலும், வாத்தும் அடிக்கடி சந்தித்துக் கொள்வாங்க. ஒருநாள் வாத்து குளத்துக்குள்ள இல்லாம கரையில் நின்று கொண்டிருந்தது. அப்போ தண்ணீர் குடிக்க வந்த முயல் சோகமா இருந்த தன்னோட நண்பன் வாத்தைப் பார்த்து, “என்ன இன்றைக்கு நீ ரொம்ப கவலையா இருக்குற?” என்று கேட்டது. அதற்கு வாத்து, “ஆமா, என்னை எனக்கே பிடிக்கல, வாய் ரொம்ப தட்டையா இருக்கு, ஆனா அந்த கொக்கு வாய் நீளமா இருக்கிறதால மீனை ஈஸியா பிடிச்சு சாப்பிடுது, என்னால அப்படி முடியல. உடம்பை பாரு படகு மாதிரி இருக்குது. இதை வச்சி ஆடி அசைந்துதான் நடக்க வேண்டியிருக்கு. வேகமாகவே நடக்க முடியல, காலை பாரு ஜவ்வு சேர்ந்திருக்கிறதால ஓடக்கூட முடியல. இப்படியெல்லாம் இருக்கிறதால என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியல” என்று வாத்து கவலைப்பட்டது.
“என்ன நண்பா இப்படி சொல்லிட்டே! எனக்கு பாரு காது பெருசா இருக்கு, கால பாரேன் முன்னாடி இரண்டு கால் சின்னதாகவும், பின்னாடி உள்ள இரண்டு கால் பெருசாகவும் இருக்குது. ஆனா கடவுள் நம்மை இப்படி படைத்தது நல்லதுக்குத்தான்” என்று முயல் கூறியது. “எப்படி நல்லதுதான்னு சொல்ற”ன்னு வாத்து கேட்டுச்சு. “ஒருநாள் காட்டில் சிங்கம் கெர்ச்சிக்கிற சத்தம் கேட்டுச்சா, உடனே என் பெரிய காதுகளை உயர்த்தி எங்கேயிருந்து சத்தம் வருதுன்னு கண்டுபிடிச்சேன். என்னை விரட்டி வந்த சிங்கத்துக்கிட்ட இருந்து தப்பிக்க என் கால்களினால் தவ்வி, தவ்வி ஓடி தப்பித்தேன். அப்போதான் ஆண்டவர் என்னை எவ்வளவு சிறப்பாய் படைத்திருக்கிறார் என்று நினைத்து ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்” என்று முயல் சொன்னதும் வேகமாக வாத்து தண்ணிக்குள்ளே இறங்கி லபக் லபக்கென்று இரண்டு மீனை சாப்பிட்டு கொண்டே சொன்னது, “ஆமா, நண்பா நீ சொன்னது சரிதான். என்னையும் ஆண்டவர் மிக சிறப்பாய் படைத்திருக்கிறார். இனி feel பண்ணாம சந்தோஷமா இருப்பேன்னு” னு தண்ணீரில் மிதந்து கொண்டே போனதாம்.
என்ன குட்டீஸ்! மிருகங்கள் கதை கேட்டீங்கள்ல, நீங்களும் வாத்து மாதிரி கவலைப்படுறீங்களா? நான் கருப்பா இருக்கிறேன், மூக்கு சப்பையா இருக்கு, குண்டா இருக்கிறேன்னு feel பண்ணக் கூடாது. இயேசு உங்களை வித்தியாசமா படைச்சிருந்தாலும், விசேஷமா நேசிக்கிறார் இல்லையா? இயேசப்பா உங்களை நேசிக்கிறதினால் நீங்கள் விசேஷம் தானே! அப்போ Don’t worry. Okay.
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250