![](https://vmm.org.in/uploads/1631845535.jpg)
இன்றைய தியானம்(Tamil) 17-09-2021
இன்றைய தியானம்(Tamil) 17-09-2021
EXPIRY DATE
“எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும்,… அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது,…” - சங்கீதம் 90:10
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள், கடைகளில் வாங்கி பயன்படுத்தப்படும் சில பொருட்களில் Expiry Date என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த Expiry Date முடிவதற்கு முன்பாக அதனை நாம் பயன்படுத்திவிடவேண்டும். இல்லை என்றால் எந்த பொருள் ஆனாலும் சரி எவ்வளவு பணத்துக்கு வாங்கினாலும் சரி, அந்த பொருளை நாம் பயன்படுத்த முடியாது. குறிப்பாக சாப்பிடக்கூடியதாக இருந்தால் அது கெட்டுப்போய்விடும் இல்லையென்றால் அது நாறிப்போய்விடும். எனவே நாம் பொருட்கள் வாங்கும் போது அதின் Expiry Date பார்த்து வாங்குவதில் கவனம் வேண்டும்.
தேவனால் படைக்கப்பட்டதான எல்லோருக்கும் இந்த பூமியில் Expiry Date உண்டு. தேவன் நம்மை எந்த நோக்கம் இல்லாமலும், எந்த திட்டம் இல்லாமலும் படைக்கவில்லை. அதற்குள்ளதாக தேவனுக்கு என்று நாம் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து இயேசுவின் சிரசின் மேல் ஊற்றினாள். அப்போது இயேசு அந்த ஸ்திரீயைக் குறித்து இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என நற்சாட்சி பெறுகிறாள். இந்த ஸ்திரீயின் Expiry Date முடிவடைவதற்கு முன்பாக பரலோக தேவனால் நற்சாட்சி பெற்று தன்னுடைய பணியைச் செய்துமுடித்தாள்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! ஒவ்வொரு மனிதனின் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருக்கலாம். எனவே பூமியில் நாம் வாழ்கின்ற நாட்களில் நமக்கு தேவனால் கிருபையாய் கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில் நம்மால் முடிந்த அளவு, நம்முடைய Expiry Date முடிவடைவதற்கு முன்பாக நம்மால் இயன்றதைச் செய்வோம்! நம்முடைய வாழ்நாட்களை மிகுந்த பயனுள்ளதாக மாற்றி செயல்படுவோம்! எனவே ஒவ்வொரு நாளும் கர்த்தரை பயத்துடனே சேவிக்க பழகுவோம். தேவனிடத்தில் கிருபைகளை பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம். தேவன் வாஞ்சையை நிறைவேற்றுவார்.
- Mrs. பேபி காமராஜ்
ஜெபக்குறிப்பு:
ஆந்திரா ரேக்கா புண்ணியகிரி மலைக்கிராமத்தில் ஆலய கட்டுமானப்பணிகள் விரைவில் நிறைவடைய, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250