![](https://vmm.org.in/uploads/1631672435.jpg)
இன்றைய தியானம்(Tamil) 15-09-2021
இன்றைய தியானம்(Tamil) 15-09-2021
உடைப்பார்! உருவாகிவிடுவீர்கள்!!
“…அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.” – எரேமியா 18:4
தேவனுடைய காரியம் என்று வந்துவிட்டாலே, அது நமது மனித மூளைக்குச் சற்று குழப்பமாகவே உள்ளது. சிறுபிள்ளைகள் விளையாடுகிறார்கள், திடீரென்று மண்ணை எடுத்து உண்ணத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர் உடனே கையில் ஒரு அடி போடுகிறார்கள். சிறு பிள்ளைகளுக்கோ அது அழுகையை வரவழைக்கிறது. உடனே அழுதுவிடுகிறார்கள். வகுப்பறையிலே நாம் மாணவர்களாக இருக்கும்போது திடீரென்று நமது சுபாவத்தின்படியே சேட்டை செய்துவிடுகிறோம். உடனே ஆசிரியர் நம்மைக் கண்டிக்கிறார். சில நேரங்களில் நம்மை அடிக்கவும் செய்கிறார். நமக்கு அது வேதனையைத் தருகிறது. ஆனால் மேற்கண்ட இரு காரியங்களுமே நம்மைத் திருத்தத்தானே ஒழிய, வேறெந்தக் காரணமும் இல்லை, நோக்கமும் இல்லை.
பரிசுத்த வேதாகமத்தில், தேவன் தமது ஜனங்களை எப்படிப் பார்க்கிறார் என்று எரேமியா 18-ம் அதிகாரத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. தேவன் தமது ஜனங்களை குயவன் கையில் உள்ள மண்பாண்டமாக வனையப்படும்போது திடீரென்று அது கெட்டுப்போய் விடுகிறது. ஆனால் அந்தக் குயவன் அந்தக் களிமண்ணை தன் பார்வைக்கு நலமானபடி, அதற்கு சற்று வேதனையைத் தந்து, விரும்பாத சூழ்நிலைக்கு உட்படுத்தி வேறே பாண்டமாக வனைந்தான். தேவன் தமது ஜனங்களை இந்தக் காரியத்துக்கு ஒப்பிட்டுப் பேசி, அவர்களை நல்வழிப்படுத்துவதை நாம் காணலாம்.
அன்பானவர்களே! தேவன் நமது குயவன். நாம் அவரது கைகளில் உள்ள களிமண். நமது சுபாவத்தின்படி சில நேரங்களில் கெட்டுப்போய் விடுகிறோம். தேவன் நம்மைத் திருத்தும்படி சில பிரச்சனைகளையோ, போராட்டங்களையோ, சோதனைகளையோ அனுமதித்து நம்மை உடைக்க சித்தம் கொள்கிறார். தேவன் தமது பார்வைக்கு நலமானபடி நம்மை வேறே பாத்திரமாக வனைகிறார். அதாவது நம்மையும், நமது சுபாவத்தையும் மாற்றி விடுகிறார். பின்பு நாம் பயன்படுகிறோம், தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறோம். ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று தேவன் நம்மை உடைப்பார்! அதனால் நாம் உருக்குலைந்து போகமாட்டோம்! உருவாக்கப்படுவோம்! ஆகவே தேவனுடைய கைகளில் ஒப்புக்கொடுப்போம். தேவனுக்காக பயன்படுவோம்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படுகிற ஆத்துமாக்கள் இன்னும் தேவனை கிட்டி நெருங்கி சேர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250