இன்றைய தியானம்(Tamil) 17.01.2025
இன்றைய தியானம்(Tamil) 17.01.2025
சீர்படு
"…உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள்" - எரேமியா 7:3
நியூ ஹைபிரிட்ஸ் தீவுகளில் வாழ்ந்த மனிதர்கள் 18 ம் நூற்றாண்டு வரை மனித மாம்சத்தை தின்று வாழ்கின்ற பழக்கமுடையவர்கள். யாரும் அந்த தீவு பகுதியில் சென்று சுவிசேஷம் அறிவிக்க முடியாது. அப்படிப்பட்ட அந்தத் தீவுக்கு ஆண்டவருடைய வார்த்தையை சுமந்து கொண்டு ஜான் பேட்டன் என்ற ஸ்காட்லாந்து நாட்டு வாலிபன் சென்றான். இது ஒரு இடுக்கமான பாதை. உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் மற்றவர்கள் சொன்னாலும், ஆண்டவருக்காக இடுக்கமான வாசல் வழியாய் செல்ல ஜான் பேட்டன் ஆயத்தம் என்று முடிவெடுத்து 1858 -ம் ஆண்டு நியூ ஹைபிரிட்ஸ் தீவு நோக்கி பயணித்தார். அவரை அம்மக்கள் பலவாறு துன்பப்படுத்தினர். ஆனாலும் அவருக்கு ஒரு தீங்கும் நேரவில்லை. எனவே இந்த பகுதி மக்கள் கிறிஸ்துவை குறித்து பேட்டன் மூலமாக அறிந்து கொண்டனர். பேட்டன் இவர்களுக்கு கல்வி அறிவு கொடுத்து 1899 ஆம் ஆண்டு அனிவா மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டார். அநேகர் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதை பேட்டன் தனது சொந்த கண்களால் கண்ட பின் 1909 -ம் வருடம் தனது 83 ஆம் வயதில் மரித்தார்.
வேதத்தில், யோனா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் நினிவே பட்டணத்திற்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார். மகா நகரமாகிய நினிவே மக்களின் அக்கிரமம் தேவ சமுகத்தில் வந்து எட்டினது. தேவன் அவர்களின் பாவ நிலைமையை யோனா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்படுத்தி அவர்கள் தங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்படுத்துவதற்கு தருணம் கொடுத்தார். அவர்கள் தங்கள் பாவ வாழ்க்கையை உணர்ந்து அதற்காக மனம் வருந்தி இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்தது மாத்திரமின்றி, தங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்படுத்தினார்கள்.
இதை வாசிக்கின்ற அன்பரே! காலம் வேகமாக கடந்து செல்கிறது. இன்னொரு புதிய ஆண்டும் பிறந்து விட்டது. தேவஆவியானவர் நம்மோடு, நம்மை சீர்படுத்த பலமுறை போராடிக் கொண்டிருக்கிறார். அநேக முறை தேவ சத்தத்தைக் கேட்டும், நம்மை நாம் சீர்படுத்தாமல், மனம் போன போக்கின்படி வாழ்ந்து கொண்டிருப்போமென்றால், நம்மை நாம் இன்று சீர்தூக்கிப் பார்ப்போம். நம்முடைய வழிகளையும், செயல்களையும் கர்த்தருக்கு முன்பாக ஒப்புவித்து, அவர் மீது நாம் நம்பிக்கை வைப்போமென்றால், நம்முடைய காரியம் நிச்சயம் சீர்படும். எனவே நம்முடைய வாழ்க்கையில் சீர்படுத்த வேண்டிய காரியங்களை சீர்படுத்த ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் டியூஷன் சென்டருக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864