Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 16.10.2024

இன்றைய தியானம்(Tamil) 16.10.2024

 

பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்

 

"நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்த் தீங்கநுபவி” - 2 தீமோத்தேயு 2:3

 

கேட்விக் என்ற நீச்சல் வீராங்கனை அமெரிக்காவை சார்ந்தவர். இவர் உலக சாதனை செய்ய விரும்பி 34 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்த திட்டமிட்டார். காட்டனினா தீவிலிருந்து தெற்கு கலிபோர்னியா வரையிலுள்ள பசிபிக் கடலை கடக்க இவருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பகுதி மிகவும் ஆபத்தானது சுறா மீன்கள் உள்ள பகுதி, கடலில் உயர்ந்த அலைகள் காணப்படும் இடம், கால சூழ்நிலை எப்பொழுதும் பனிமூட்டமாக இருக்கும், தண்ணீரும் குளிர்ந்திருக்கும். எல்லா சவால்களையும் அறிந்த பின்பும் தைரியமாக நீந்தி கடலின் அந்த பகுதியை கடக்க ஒப்புக்கொண்டார். இதற்காக கடும் பயிற்சி எடுத்திருந்தார். அதனால் போட்டி அவருக்கு மகிழ்ச்சியை தருவதாகவே இருந்தது. வெகுதூரம் வெகு நேரம் சென்ற பின்பும், கரை வரவில்லையா? என ஏக்கத்துடன் பார்த்து பார்த்து சோர்ந்து போனார். மனதளவில் ஏற்பட்ட சோர்வு, சரீரத்தையும் சோர்வுக்குள்ளாக்கியது. இதனால் குளிரை அவளால் சமாளிக்க முடியவில்லை, பனிமூட்டம் கண்ணை மறைத்தது. இதற்கு மேல் எவ்வளவு தூரம் என்று தெரியாததால் தன்னை மேலே தூக்கிக் கொள்ளும்படி கூறினார். உங்களால் முடியும் என்று அவருடைய கோச் எவ்வளவோ உற்சாகப்படுத்தினார். பதற்றம் அடைந்த அவள் இன்னும் சில மணி நேரம் கடலில் இருந்தால் மோசம் நேரிடும் எனக்கருதி உடனே தன்னை தூக்கி விடும்படி கூறினார். அவளை மேலே தூக்கி தரையை காட்டினார்கள். சில நிமிடங்கள் கடந்தால் கரையை எட்டிப் பிடித்து விடலாம் என்றிருந்தது. மிகுந்த வேதனை அடைந்தாள். "கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே" என்கிற பழமொழியைப் போலானது கேட்விக்கின் செயல். 

 

இன்று நாமும் கூட நல்ல போராட்டத்தை போராடிக் கொண்டிருக்கிறோம். நமக்கென்று நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கிரீடத்தை மறந்தவர்களாய் போராட்டத்தையே பார்த்து சோர்ந்து போய், ஆவிக்குரிய வாழ்க்கையின் நல்ல போராட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொள்கிறோம். 

ஜெப வாழ்க்கை தளர்ந்து, வேதவாசிப்பு, சாட்சி வாழ்க்கை இவை அனைத்தும் தளர்ந்து போராட்டம் ஓய்ந்து போய் விடுகிறது. ஒரு பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். 

 

தேவபிள்ளையே! வாழ்க்கையின் போராட்டங்களை கண்டு சோர்ந்து போகாதீர்கள். உங்களை அழைத்த தேவன் நித்திய ஜீவகரை வரை கொண்டு சேர்க்க வல்லவராயிருக்கிறார். ஆகவே கர்த்தரை நம்பி நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்திலே பொறுமையோடு ஓடி முடித்து ஜெயம் பெறுவோம். வெற்றி நிச்சயம்!

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

தமிழ்நாட்டில் சபை இல்லாத ஆயிரம் கிராமங்களில் சபை கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)