Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 21.06.2024

இன்றைய தியானம்(Tamil) 21.06.2024

 

அர்ப்பணிப்பு

 

"…ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர்…" - அப்.9:6

 

மூன்று திசைகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வந்தேன். அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு Dam கட்டியிருக்கின்றனர். கனமழை காலங்களில் அந்த Dam நீரால் நிரம்பி சிறிய கடல் போல் காட்சி அளிக்கும். அது மனதுக்கு ரம்மியமாய் இருக்கும். அந்த Dam க்கு நீர் இவ்வளவு வருவதற்கு காரணம் ஒரு ஓடை. அதன் துவக்கம் பறந்து விரிந்த நிலங்களில் சிறு நீரூற்றாய்த் துவங்கும். மழைக்காலங்களில் நீண்ட பயணமாய் அநேக நீரோடைகள் இணைந்து Dam க்கு வருகிறது. அவ்வாறு வருவதால் Dam ல் நீரோட்டம் பெருகுகிறது. பல விளைநிலங்கள் பிரயோஜனமடைகின்றன. மக்களுக்கும் போதுமான நீர் கிடைக்கிறது. அந்த ஓடைகள் எங்கெங்கோ தாறுமாறாய் பாய்ந்து சென்றால் இந்த அளவு பயன்பட முடியுமா?

  

புதிய ஏற்பாட்டில் சவுல் என்ற வாலிபன் கூட தவறான திசைகளில் பயணித்தார். பாரம்பரிய நியாயங்களுக்காய் மிகவும் பக்தி வைராக்கியமாய் தேவனுடைய சபையை துன்பப்படுத்தி தாறுமாறாய் வாழ்ந்து வந்தார். யாருக்கும் பயனற்ற வாழ்வாய் அவருடைய வாழ்வு இருந்தது. ஆனால் வானத்திலிருந்து ஒளியையும், சத்தத்தையும் கேட்டபோது “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்” என்று கேட்டு தனக்கான திட்டம் புறஜாதிகளிடத்தில் இயேசுகிறிஸ்துவை சுவிசேஷமாய் சொல்வதே என்பதனை அறிந்தார். அந்த பரம தரிசனத்திற்குத் தன்னை அர்ப்பணித்தார். அச்சிறு அர்ப்பணிப்பே பவுலை இத்தனை நாட்டிற்கு இயேசுவை சொல்ல வைத்தது . வேதத்திலே உள்ள இத்தனை நிரூபங்கள் மூலமாய் இன்றும் நம்முடன் பேசுகிறார், கிறிஸ்துவுக்காக இவ்வளவு பிரயாசங்கள் பட வைத்தது. அநேகருக்கு, ஏன் நமக்கும் பயனுள்ள வாழ்வு வாழ்ந்துள்ளார். தைரியமாய் என்னைப் பின்பற்றுங்கள் என சொல்லும்படியாய் வாழ்ந்தார். அந்த நீரோடை வேறு திசையில் சென்றால் பயன் இல்லை நாம் அதன் பலனை அனுபவிக்க முடியாது . சரியான பாதைக்கு திருப்பி விடப்பட்டபோது அதின் பலனை நாம் முழுமையாய் பெறுகிறோம். 

 

பிரியமானவர்களே! இந்த பூமியில் தேவனுடைய கிரியை நம்மில் வெளிப்பட நம்முடைய பங்கு என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் நம்மை அவரது சித்தம் செய்ய அர்ப்பணிக்கும் போது தேவனுடைய கிருபையும் இரக்கமும் நீரூற்றாய் நம்முள் பாய்ந்து ஆத்ம தாகத்தால் நிரப்பப்படுவோம். இந்த ஆத்துமதாகமே நம்மை சேனைத் தலைவராம் இயேசுவின் போர்த்தளத்தில் அழகாய்த் திரள் திரளாய் ஏராளமான ஆத்துமாக்களை கொண்டு சேர்க்க உதவும்.

- A. பியூலா

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் அநேகர் பங்குபெற, பயனடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)