Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 28.04.2024 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 28.04.2024 (Kids Special)

 

பாவத்தை மறைக்காதே!

 

"எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்" - சங்கீதம் 31:1

 

யார் கண்ணிலும் மாட்டி விடக்கூடாது என்று மெல்ல மெல்ல பதுங்கியபடியே பள்ளியை விட்டு வெளியேறினான் ஜார்ஜ். மனசு பயத்தால் படபடத்தது. அவனுக்காக காத்துக் கொண்டிருந்த ஹென்றி, பூனை போல வந்து முதுகில் தட்டினான். பயத்தில் கத்தப்போன ஜார்ஜ் வாயை தன் கையால் மூடி விட்டான் ஹென்றி. என்னடா நீயும் என்கூட சர்க்கஸ்க்கு வர்றியா? என்ற ஜார்ஜிடம் அதுக்காகத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தேன். வா போகலாம் என்று இருவரும் வகுப்பறையை கட் அடித்து விட்டு வெளியே போனார்கள்.

 

School- ஐ கட் அடித்து விட்டு ஊர் சுற்றுவது எவ்வளவு பெரிய தவறு குட்டீஸ். நீங்க எல்லாரும் அப்படி செய்யமாட்டீங்கதானே! கரடி வாயில் மந்திரம் சொல்வது, யானை கொட்டு அடிப்பது, சர்க்கஸ் கோமாளிகள் நடிப்பது ரொம்ப ஜாலியா இருக்கும். அத்தோடு பாப்கார்ன் வாங்கி சாப்பிடுவது என்று ஹென்றி பேசிக் கொண்டே வந்தான். ஜார்ஜ் உள்ளத்தில் பயம், அம்மாவுக்கு தெரியாமல் பர்ஸில் இருந்த இருநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து விட்டோமே என்று மனசு கஷ்டமாக இருந்தது. சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும் அம்மா சொன்னாங்க, பாப்பாக்கு காய்ச்சல் அதிகமானதால் ஜன்னி வந்து விட்டது. ஹாஸ்பிட்டல் போக பணத்தைத் தேடினேன் பர்ஸை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை. அப்புறம் பணம் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்த போது, நம்ம சர்ச் பாஸ்டரம்மா வந்து அவர்கள் தான் உதவி செய்தார்கள். இப்பொழுது தான் போனார்கள் என்றதும் ஜார்ஜ் தேம்பித்தேம்பி அழுதான். அம்மா நான் தப்பு பண்ணி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். பர்சில் இருந்த இருநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு சர்க்கஸ் பார்த்து விட்டேன் என்று ரொம்பவே அழ ஆரம்பித்தான், பாஸ்டரம்மா வராவிட்டால் பாப்பாவின் உயிருக்கே ஆபத்தாயிருக்குமே என்றான். சரி தம்பி இனிமேல் இப்படி தவறு செய்யாதே! இயேசப்பாவிடம் சொல்லிவிட்டு மன்னிப்பு கேள். இனி இப்படிப்பட்ட தவறை செய்யாதபடி இருக்க இயேசப்பா உதவி செய்வாங்க என்று அம்மா சொன்னதை கேட்டு இயேசப்பாவிடம் மன்னிப்பு கேட்டான். அவன் உள்ளத்திலுள்ள பயமெல்லாம் பஞ்சாய் பறந்து போனது. பாப்பாவும் நல்ல சுகம் பெற்று School - க்கு போக ஆரம்பித்தாள். அம்மாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 

 

குட்டிச் செல்லங்களே, ஜார்ஜ் தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டு, அந்த பாவத்தை செய்யாமல் இருக்க இயேசப்பாவின் உதவியை நாடினது போல நீங்களும் செய்த பாவத்தை மறைக்காமல் இயேசப்பாவிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள தயாரா இருக்கணும். செய்வீங்க தானே குட்டீஸ்.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)