Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 27.04.2024

இன்றைய தியானம்(Tamil) 27.04.2024

 

இந்த சிந்தை வேண்டாம்

 

"மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்" - நீதி. 16:5

 

ஒரு அழகிய ரோஜாத் தோட்டம் இருந்தது. அதிலே வண்ண வண்ண ரோஜாக்கள் மலர்ந்திருந்தன. அதிலே ஒரு ரோஜா மட்டும் மிகவும் அழகாக, பார்ப்பதற்கு அதின் நிறம் தனித்துவமாக இருந்தது. மற்ற ரோஜாக்களை விட சற்று தள்ளியே நடப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ அதற்கு தன்னைக் குறித்து மிகவும் கர்வம்! மற்ற ரோஜாக்களை எப்பொழுதும் அற்பமாகவே நினைத்தது. அதிலே ஒரு ரோஜா சொன்னது, "நண்பா, இறைவனுடைய படைப்பில் எல்லாருமே சமம் தானே, ஏன் நீ உன்னை இவ்வளவு உயர்வாக நினைக்கிறாய்? நீ இப்படி இருந்தால் அது கடவுளுக்குப் பிடிக்காது" என்றது. ஒரு நாள் கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. அப்பொழுது தனியேயிருந்த அந்த ரோஜா சாய்ந்து படுக்கத் தொடங்கியது. அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒரு ரோஜா தன் கையை நீட்டி, என் கையைப் பிடித்துக் கொள் என்றது. நான் என்ன உன் கையைப் பிடிக்க வேண்டுமா? என ஆணவத்தோடு கேட்டது. சில நொடிகளில் அது பிடுங்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது.

 

இதனை வாசிக்கின்ற அன்பானவர்களே! இதே போலத்தான் வேதாகமத்தில், ஆகாப் என்னும் இராஜா யோசபாத் என்னும் யூதாவின் இராஜாவோடு சேர்ந்து யுத்தத்துக்கு போனான். ஆகாப் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணி தன் சுயபலத்தை நம்பினான். ஆகாப் மனமேட்டிமை உள்ளவனாகவும், தேவனுக்கு விரோதமான பாவங்களைச் செய்தபடியினாலும், யோசபாத்தோடு அவன் கை கோர்த்து யுத்தத்திற்குச் சென்ற போது, தெரியாமல் ஒருவன் வில்லை நாணேற்றி அம்பு எய்ததால் மடிந்து போனான். வேஷம் மாறி யுத்தத்திற்கு போவோம் என்று நினைத்துச் சென்றான். அவனுடைய துணிகரமே அவனைக் கொல்ல ஆயுதமாக இருந்தது. இதனை இன்றைய வேதபகுதியில் வாசிக்கலாம். மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன், கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான் என்ற வசனம் ஆகாபின் வாழ்வில் உண்மையாகிவிட்டதல்லவா?  

 

தேவபிள்ளையே, மனமேட்டிமையான சிந்தை தேவனுக்கு முன்பாக அருவருப்பானது. மேட்டிமையான எண்ணம் நம்மை அழிவுக்கு நேராய் வழிநடத்தும். ஆம், அழிவு வரும் முன்பே நாம் நம் வழிகளை சீர்தூக்கிப்பார்த்து மேட்டிமையான பேச்சை, பார்வையை, நடத்தையை நம்மை விட்டு விலக்குவோம். தேவ கோபத்திற்குத் தப்பி அவரது இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்.

- Mrs. நித்யா நித்யானந்தா 

 

ஜெபக்குறிப்பு

ஸ்கூல் மிஷன் மூலம் சுற்றுப்புற கிராமங்களை மையமாகக் கொண்டு நமது வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய பள்ளிக்கூடத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)