Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 26.04.2024

இன்றைய தியானம்(Tamil) 26.04.2024

 

மறுகன்னம் காட்டு

 

"…அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே" - நீதிமொழிகள் 24:29

 

Campus crusade என்ற ஊழியத்தில் பகுதி நேரமாக பணி செய்தான் ஒரு கால்பந்தாட்ட வீரன். இவ்வாலிபன் ஒரு முறை கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விளக்கும் ஒரு கைப்பிரதியைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கொடுத்த கைப்பிரதியைப் பெற்றுக் கொண்ட இளம் வாலிபன் ஒருவன் கைப்பிரதியை கசக்கி எறிந்து விட்டு அருவருப்போடு அவனைப் பார்த்து முகத்தில் துப்பினான். உன்னுடைய இயேசுவையும் இதே போலத்தான் அருவருப்பாய் பார்க்கிறேன் என்றான். இயற்கையாகவே கால்பந்தாட்டக்கார வீரர்களின் சரீரம் மிகவும் பெலமுள்ளதாய் தான் இருக்கும். ஆனால் இந்த வீரன் தன் பெலத்தை அவனிடம் காட்டாமல், இயேசுவுக்காக அதைப் பொறுத்துக் கொண்டு, அதனை தன்னுடைய கைக்குட்டையால் துடைத்தான். மேலும் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அநேக மாணவர்களின் உள்ளங்களில் தேவன் இடைபட்டார். மேலும் அவ்வாலிபனின் முகத்தில் துப்பிய நபர் ஒரு வருட காலத்துக்குப் பின் இரட்சிக்கப்பட்டு கால்ப்பந்தாட்ட வீரனுடன் சேர்ந்து ஊழியம் செய்தார்.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் செய்த மலைப்பிரசங்கம் மிகவும் பிரசித்தமானது. மலைப்பிரசங்கம் என்று சொல்லக்கூடிய மத்தேயு 5,6,7 ஆகிய அதிகாரங்கள் பலரால் மனப்பாடம் செய்யப்பட்டும், பின்பற்றப்பட்டும் வருகிறது. கிறிஸ்தவரல்லாதோர் கூட தங்களுடைய மேடைப் பேச்சுகளில் இந்த மலைப்பிரசங்கத்தை உதாரணம் காட்டி பேசுகின்றனர். அதில் இயேசு என்ன சொன்னார் என்றால், நான் உங்களுக்குச் சொல்கிறேன் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என்று!

 

பிரியமானவர்களே! பலர் நம்மை கிறிஸ்துவினிமித்தம் பலருக்கு முன் இழிவுபடுத்தலாம். நாம் பதிலுக்கு பதில் தாக்காமல் நம்மை நசுக்கிறவர்களுக்கு மறுகன்னத்ததைக் காட்டுவோம். எதிர்த்து நிற்பதைக் காட்டிலும், பொறுத்து போவதற்கே அதிக வலிமை வேண்டும். தேவன் அவ்வலிமையை நமக்குத் தருவார். தேவனைத் தொடர்ந்து பின்பற்றுவதால் நம்மை யார் காயப்படுத்தினாலும் மறுகன்னத்தைக் காட்ட எங்களைப் பலப்படுத்தும் என்று கேட்கும் பட்சத்தில் பெலனும் கிடைக்கும். ஆண்டவரை பின்பற்றுகிற சீஷராகவும் மாறுவோம்! தேவன் தமது திட்டத்தின்படி நம்மை உயர்த்துவார்.

- Mrs. ஜாஸ்மின் பால்

 

ஜெபக்குறிப்பு:

நமது வட இந்திய மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)